ரஷ்யாவின் ஏவுகணை எதிர்ப்புத் திட்டமும் வலுக்கும் சிரியா இஸ்ரேல் போட்டியும் | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யாவின் ஏவுகணை எதிர்ப்புத் திட்டமும் வலுக்கும் சிரியா இஸ்ரேல் போட்டியும்

சிரியாவிவகாரம் மேற்காசியஅரசியலில் சவால் மிக்க இரு சக்திகளை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் எதிர் சிரியா என்ற அரசியல் போட்டித் தன்மைமேற்காசியஅரசியலுக்குள் வலுவாக பேசப்படுகின்றது. அந்த போட்டித்தன்மையை வலுவுடையதாக மாற்றுவதில் ரஷ்யாவின் பங்கு பாரியது. 2010 களில் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட எஸ் 300 ரக ஏவுகணை எதிர் ஆயுதத்தை சிரியாவிற்கு மீள வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இக்கட்டுரை புதிய விமான எதிர்ப்பு ஏவுகணைத் திட்டமொன்றை சிரியாவிற்கு வழங்கப்போவதாக வெளிப்படுத்தியுள்ள செய்தி எவ்வகை தாக்கத்தை மேற்காசிய அரசியலில் ஏற்படுத்தும் என்பதை விளங்கிக் கொள்வதாகும்.

ரஷ்யாவினால் சிரியாவிற்குவழங்கப்பட்ட எஸ் - 300 ரக ஏவுகணை மூலம் இஸ்ரேலிய விமானங்களின் மீது தாக்குதல் நிகழ்த்தினால் அதனை அழிக்கப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. 1979 ஆம் ஆண்டு எஸ் - 300 ரகஏவுகணை சோவியத் யூனியன் முதல் முதலில் தயாரித்திருந்தது. பின்னர் ரஷ் யஆயுதபடையில் அது சேர்த்துக் கொள்ளப்பட்டது. இது விமானத்தை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணை ஆகும். பெருமளவுக்கு தொடர்பாடல் அலகுகளை கணீப்பீடு செய்து துல்லியமாக தாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது. இதனை ரஷ்யா 1997 ஆம் ஆண்டு எஸ் - 300 PMU – 2 என்னும் விரிவாக்கத்தை செய்துகொண்டதோடு அமெரிக்க ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்துக்கு நிகரானது என்றும் குறிப்பிடப்படுகிறது. நேட்டோ இதனை SA/20எனவும் அழைக்கிறது. 2017 ஆம் ஆண்டு எஸ் -300 ரக ஏவுகணை உற்பத்தியை ரஷ்சியா நிறுத்திஅ தன் வழங்கலின் அளவை அதிகரித்து எஸ் - 400 ரக எதிர்ப்பு ஏவுகணையை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்தது.

ரஷ்ய தயாரிப்பான எஸ் -300 PMU - 2 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு செயல்படுகின்ற தன்மையானது வலிமை பொருந்தியதாக அமைகிறது என்பதனை இதன் பாதுகாப்பு உத்தி விளக்குகிறது. இதனை விளங்கிக் கொள்ள இதன் இயங்குதிறனை மிகச் சுருக்கமாக அவதானிப்போம்

இது விமானங்களை ரேடர் மூலம் கண்காணித்து பதில் தாக்குதலைமேற்கொள்கிறது. ஏறக்குறைய 300 கிலோமீற்றர் வரம்புக்குள் அல்லது எல்லைக்குள் பிரவேசிக்கும் விமானங்களை கண்காணிப்பு ரேடர் மூலம் அவதானித்து பதில் தாக்குதலை மேற்கொள்கிறது. அதனோடு அத்தகைய விமானங்கள் அதன் இயந்திரத்தின் வலிமைகள் அதன் தகவல் தொடர்பு இலக்குகள் என்பனவற்றை மதிப்பீட்டு ஒரு இலக்கை அடையாளம் கண்டு கட்டளை வாகனத்திலிருந்து ஏவுகணை பிறப்பாக்கி பகுதிக்கு உத்தரவிடுகிறது. இதிலிருந்து வெளிக்கிளம்பும் ஏவுகணைகள் வான் மேற்பரப்பில் இரண்டு ஏவுகணை இலக்குகளை நோக்கி நகர்த்துகிறது. ஏறக்குறைய ஆறு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வெளியேற்றும் திறன் கொண்டதாக உள்ளது. ஒரேநேரத்தில் 12 ஏவுகணைகளும் ராடர் மூலம் வழிகாட்டக் கூடியதாகவுள்ளது. இத்தகையவலிமைபொருந்திய 300 ரகஏவுகணை ஒவ்வொரு வாகனங்களிலிருந்தும் அதன் கொள்ளனவு நான்கிலிருந்து இருபத்தினான்காக ஆறு கட்டளை வாகனங்களிலிருந்து அனுப்பக் கூடியதிறன் கொண்டிருக்கின்றது. இதன் சிறப்பு மூன்று வினாடி இடைவெளிக்குள் இரண்டு ஏவுகணை விகிதம் மேற்குறித்த ஏவுகணைகளை தாக்குதல் எல்லைக்கு நகர்த்தக்கூடியதாகவுள்ளது. இது நிலையான ஏவுகணைத் திட்டமாகவும் செயல்படுத்தக் கூடிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனது நிறுத்தல் காலம் 5 நிமிடங்கள் மட்டுமே.

2010 ஆம் ஆண்டு சிரியாவிற்கு எஸ் - 300 ரக ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு ரஷ்யா தயாராக இருந்தது . ஒப்புதல் அளிக்கபட்டதன் படி வழங்குவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இஸ்ரேலின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டது. பின்னர் யுத்ததேவைகளை பொறுத்து கைமாறியுள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ஆனாலும் சிரியா அவ்வகை ஏவுகணையினை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லாதபோதும் ரஷ்யாஅமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதலினை 300 ரக ஏவுகணை கொண்டு கணிசமானவற்றை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இஸ்ரேல் தொடர்ச்சியாக ரஷ்யாமீது அழுத்தம் கொடுத்துவருகிறது.

எஸ் -300 ரக ஏவுகணை சிரியாவிடம் கையளிக்கப்படுவது என்பது மேற்காசியா அரசியலிலும் அதன் இராணுவச் சமநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இஸ்ரேலின் விமானதாக்குதல் திறனுக்கு பாரிய சவாலாக அமையும் என்றும் சிரியாவின் வலு மற்றும் அதன் பாதுகாப்பு , பிராந்திய சமநிலை என்பன கைமாறும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் மேற்காசியாவின் அரசியலுக்குள் சிரியா எழுச்சிகரமான சக்தியாக அமையும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை என்பதே பாதுகாப்பு ஆய்வாளரின் முடிவாகும். இதனாலேயே ரஷ்யாவின் இராணுவ ஆய்வுகளின் முடிவுகளின் படி இத்தகைய விமான எதிர்ப்பு ஏவுகணையை சிரியாவில் நிறுத்துகின்றபோது அதன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைக்கப்படும் என்று எஸ் - 300 ரகஏவுகணை தொடர்பான நீண்டகாலத் திட்டமிடல் ஒன்றை அடிப்படையாககொண்டே இது அமைக்கப்படவேண்டும் என்றும் திட்டமிட்டு இருக்கின்றது. ரஷ்யாவின் இராணுவ ஆய்வுகளின் படி சிரியாவில் நிறுத்தப்படவுள்ள எஸ் - 300 ரக விமான எதிர்ப்புமுறைமைக்கு எதிராகவே ஆசாத் அரசு மீதான இராசயன குற்றச்சாட்டை அடிப்படையாககொண்டு கூட்டுப்படைத் தாக்குதலை மேற்கொண்டது எனக் கூறுகின்றது.

இதே சந்தர்ப்பத்தில் ரஷ்யாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் அலெக்சாண்டர் செஜண் ynet செய்தி சேவைக்குவழங்கி பேட்டியில் இஸ்ரேலிய பாதுகாப்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்ற விதத்தில் 300 ரக ஏவுகணை தொடர்பான தாக்குதலுக்கான திட்டமிடலோ அத்தகைய இலக்கைநோக்கிய நகர்வுகள் எவற்றையுமோ அதற்கான எண்ணப்பாடோ இஸ்ரேலிடம் இல்லை எனக் கூறுகின்றார். அதேநேரம் Kommersant அறிக்கை குறிப்பிடுகின்றபோது ரஷ்யா எஸ் 300 ரகஏவுகணைத் திட்டம் எதனையும் இதுவரை ஆசாத் அரசாங்கத்திற்கு விற்பனை செய்யவில்லை. அதற்கான எந்தவகை இராணுவ உதவிகளையோ அல்லது அதற்கான திட்டங்களையோ மேற்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கவில்லை.

அந்த அறிக்கையில் ரஷ்ய தயாரிப்பான 300 ரகஏவுகணை முறைமைஅதற்கான ராடர் முறைமை என்பன நீண்ட தூர மற்றும் தாக்குதல் விமானங்களை பாதுகாப்பதற்கான உத்தியாகவே உருவாக்கப்பட்டது என்றும் ஈரானுக்கு இதனை வழங்கியுள்ளதாகவும் சிரியாவில் உள்ள ரஷ்யப்படைகள் இவற்றை பயன்படுத்துவதாகவும் இது தற்போது எஸ் - 400 ரகஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை சிரியாவில் உள்ள ரஷ்யப் படைகள் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே எப் - 35 ஜெட் தாக்குதல் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே சிரியா மீதான ரஷ்சியாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அதனை பலப்படுத்திவருவதுடன் அதனை மேற்காசிய அரசியலில் ஈரான் - சிரிய கூட்டு உறுதிப்படுத்துகின்றது. இதனால் மேற்காசிய அரசியல் சமநிலையில் இஸ்ரேலுக்கு நிகராக ஈரான் - சிரியாவின் வளர்ச்சி பலம் அடைவதுடன் வலுமிக்க இராணுவசக்திகளாக ரஷ்யாவினால் உருவாக்கப்படுகிறது. 300 ரகஏவுகணை இத்தகைய அணிகளிடம் இருப்பதே கூட்டுப்படைகளின் விமானத் தாக்குதல் நெருக்கடி அடைந்தமைக்கான காரணம் ஆகும். ஏனெனில் அமெரிக்க தலை மையிலான கூட்டுப்படை ஒருதடவையுடன் தாக்குதல் நடத்தியதும் பாரியயுத்தம் ஒன்றுக்குபோகாமல் தடுத்ததும் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதலில் 100 க்கு மேற்பட்டவை இலக்கை அடையமுடியாமல் போனமைக்கும் எஸ் 300 ரகஎதிர்ப்பு ஆயுதமே காரணமாகும். இதனால் மேற்காசிய பிராந்தியத்தில் ரஷ்யாவிடமோ அல்லது ஈரானிடமோ அல்லது சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படையிடமோ எஸ் 300 ரக ஏவுகணை உள்ளது என்பதுடன் கூட்டுப்படை தாக்குலுக்கு எதிராக பாவிக்கப்பட்டது என்பதையும் உறுதிப்படுத்தமுடியும். அதேநேரம் இத்தகைய தாக்குதலின் விளைவுகளை மேற்குநாடுகளும் இஸ்ரேலும் உணர்ந்து இருப்பதனால் ரஷ்யாவோடு இராஜதந்திர ரீதியான உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் ரஷ்யாவோடு எஸ் 300 ரகஏவுகணை தொடர்பாக உரையாடியுள்ளது. இந்த ஏவுகணை சிரியாவிற்கு வழங்கப்படுவதை தடுக்கமுயற்சிக்கும் இஸ்ரேல் ரஷ்சியாவால் முன்மொழியப்பட்டுள்ள புதியஏவுகணை தடுப்புதிட்டம் தொடர்பாக அதிர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் ரஷ்யா சிரியாவிற்குவழங்க இருக்கின்ற ஏவுகணைத் திட்டமானது எஸ் - 300 ரகமா அல்லது எஸ் - 400 ரகமா அல்லது ஹைபர் சொனிக்கா என்ற குழப்பம்இஸ்ரேலுக்கு எழுந்துள்ளது. உலக பாதுகாப்பு ஆய்வாளரிடமும் அத்தகைய கேள்வி காணப்படுகின்றது.

எனவே எஸ் 300 ரக ஏவுகணை பிராந்திய சர்வதேச அரசியலில் வலுச் சமநிலையில் மாற்றத்தையும் பிராந்தியஅரசியல் போட்டித்தன்மைக்கும் வழிவிட்டுள்ளது.

Comments