![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/06/10/ch0.jpg?itok=F8sXF3NT)
எமது வாழ்க்கைக்கு விளையாட்டு என்பது மிக முக்கியமானதொன்றாகும். விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் அனுகூல நிலையை அடைகின்றோம். எமது உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் இருக்க விளையாட்டுகள் எமக்கு உதவுகின்றன. பல்வேறு விளையாட்டுகள் மாணவர்களுக்காக காணப்படுகின்றன. உதாரணமாக, வலைப்பந்து (Net ball), கால்பந்து (football), மேசைப்பந்து (Table Tennis), கரப்பந்து (Volly ball), மட்டைப்பந்து (Cricket), கூடைப்பந்து (Basket ball), கபடி மற்றும் நீச்சல் (Swimming).
சில விளையாட்டுகள் உள்ளகம், வெளியகம் என இரு பிரிவுகளாக நடைபெறுகின்றன. விளையாட்டுகள் சிறந்த மானிடப்பண்புகளை வளர்க்கின்றன. உதாரணமாக, தலைமைத்துவம், ஒற்றுமை, சமாதானம், வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு என்பனவாகும்.
பாடசாலைகளில் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொருட்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உதாரணமாக கிராம விழா, புதுவருட விழா, வெசாக் விழா மற்றும் தேசிய விழாக்கள் ஆகும். இவை குழுவாக விளையாடப்படுவன. விளையாடுவதன் மூலம் விளையாட்டு விதிமுறைகளை அறிந்திருக்கின்றோம். சில மாணவர்கள் மிகவும் சோம்பேறியாக இருக்கின்றனர். அவர்களுக்கு விளையாடுவதற்கு நேரமில்லை. காரணம் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வதே ஆகும். சிலவேளைகளில் வகுப்பு முடிய இரவுமாகலாம். அப்போது மாணவர்கள் மிகக் களைப்பாக இருப்பார்கள். எனவே மாணவர்கள் கல்விக்கும், விளையாட்டுக்கும் நேரத்தை சரிசமமாக ஒதுக்க வேண்டும். விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
எஸ். ஷோபனா,
தரம் 08 E, சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயம்,
புவக்பிட்டிய.