மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும் மூளை நரம்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிறுவயதில் குழப்பம் செய்யும்,படிக்காத பிள்ளைகளை இரண்டு காதுகளையும் பிடித்தபடி, உட்கார்ந்து எழும்ப சொல்லி ஆசிரியர்கள் தண்டனை வழங்குவதுண்டு. அச் செயற்பாட்டினால் காது நரம்புகள் செயல்பட்டு, மூளை நரம்புகள் இயங்க ஆரம்பிக்குமாம்.அது சிறுவர்களின் செயற்திறனை அதிகரிக்குமாம். அதை தோப்புக்கரணம் போடுதல் என்பர். சில ஆசிரியர்கள், தலையில் குட்டுவர்.அப்போது மூளைக்கு தரப்படும் சிறு அதிர்ச்சியால் மூளை செயல்படும் என்பதும் ஐதீகம்