1958 ஆம் ஆண்டு பிறந்த பிறந்த ஐமால் கசோஜி எனும் பத்திரிகையார் துருக்கியிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தினுள் ஆவணங்களை பொறுவதற்காக சென்ற போது காணமல் போயுள்ளார். அவரது காணமல் போன விவகாரம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் சவூதி அரேபியாவுக்கு எதிரான தீர்மானங்களுக்கு தூண்டியுள்ளது. ஒரு பத்திரிகையாளன் காணமல் போன விவகாரம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சவூதி அரேபியாவுக்கு எதிரான தீர்மானங்களுக்கு தூண்டியுள்ளது. ஒரு பத்திரிகையாளன் காணமல் போன விவகாரம் நாடுகளுக்கிடையிலேயே உறவை சீர்குலைக்கும் அளவுக்கு பிரபலமானவரும் மேற்குலக ஆதரவாளனுமாக விளங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐமால் காணமல் போனமையும், அமெரிக்க சவூதி அரேபிய உறவையும் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கடந்த 2ஆம் திகதி துருக்கியில் அமைந்துள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்குள் சென்ற போது ஐமால் காணாமல் போயுள்ளார். சவூதி அரேபிய பெண்னை விவகாரத்து செய்துவிட்டு துருக்கியப் பெண்னை திருமணம் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பான ஆவணங்்களை பெறுவதற்காகவே சவூதியரேபிய தூதரகம் சென்றுள்ளதாகவும் அப்போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதே நேரம் சவூதியரேபிய தூதரகத்தினுள் அவர் அடிக்கப்பட்டதாகவும் நபர் ஒருவர் குறிப்பிட்டதாக வோசிங்டென் போஸ்ட் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய தூதரகத்திற்குள் காணமல் போன ஐமால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிபதிவுகள், காணொளிகள் அடங்கிய ஆதாரம் துருக்கிய அதிகாரிகளிடம் உண்டு என பிபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. அதேநேரம் துருக்கிய அதிகாரிகள் சவுதி அரேபியாவே கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இவற்றை எல்லாம் நிராகரித்துள்ள சவூதி அரேபியத் தூதரகம் அவர் தூதரகத்திற்குள் நுழைத்தற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டபோதும் பின்பு தூதரகத்திற்குள்ளேயே சவூதி அரேபியர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காணமல் போயிருக்கலாம் என குறிப்பிடுகின்றது.
ஏன் ஜமால் சவூதி அரேபியத் தூதரகத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அதாவது சவூதியரேபியாவுக்கு ஜமாலை கொலை செய்வதற்கான காரணம் எதுவாக அமையலாம் என்பது தவிர்க்க முடியாத வினாவாகும்.
முதலில் ஜமால் ஒரு பத்திரிகையாளர். அவர் சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தின் ஆலோசகர். கருத்துரைப்பவர். ஆனால் சவூதியரேபியா அரசின் போக்கினை சரி செய்ய வேண்டிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்ட பத்திரிகையாளர். இதனால் அரச குடும்பத்துடனும் ஆளும் அரசாங்கத்துடனும் அதிருப்தி அடைந்து சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறினார். சவூதி அரேபியாவின் முடியாட்சியை பல கோணங்களில் விமர்சித்தார். எல்லையற்ற பலவீனங்களை சுட்டிக் காட்டி வந்ததுடன் அமெரிக்க ஐரோப்பிய அரசுகளுடனான சவூதி அரேபியாவின் உறவுக்கே ஆபத்தான கருத்துக்களை முன்வைத்தார். சவூதி அரேபியாவுக்கான நிதி உதவிகளிலும் இராணுவ ரீதியான உதவிகளிலும் ஆபத்தினை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இவரது விமர்சனங்கள் அமைந்திருந்தன. அதுமட்டுமன்றி சர்வதேச மட்டத்தில் தெரியப்பட்ட பத்திரிகையாளன் என்பதைவிட சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தின் மீது முன்வைத்த விமர்சனங்களே உள்ளும், புறமும் அபாயமான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்களும் யூத வழித்தோன்றல்கள் என்ற பார்வையும் மதிப்பீடும் உண்டு. அவர்கள் அரபு அல்லாத இஸ்லாமிய தோற்றத்தை கொண்டிருந்தாலும் உள்ளார்ந்த தளத்தில் யூத வழித்தோன்றல்களாகவே உள்ளனர். மேற்காசியாவில் தோன்றிய மத அடையாளங்களின் ஊற்று கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய மூன்றினது மதங்களையும் ஒரே கருவிலிருந்து தோன்றியதாக வரலாறு கூறுகிறது. கிறிஸ்துவத்துடனும், இஸ்லாத்துடனும் மிக நெருக்கமும் ஒரே வரலாற்று மூலங்களைக் கொண்டதுமான மதப்பிரிவாக யூதேயம் அமைந்திருக்கின்றது. இதனால் இஸ்லாத்திலிருந்தும், கிருஸ்தவத்திலிருந்து தனித்துவமான தன்னை அடையாளப்படுத்த முயன்ற யூதமதவாதம் ஆட்சி அதிகாரத்திலும் அரசியல் இருப்பிலும் தன்மீதான விமர்சனங்களுக்கு எதிராக செயல்பட தவறுவதில்லை என்றே கூறலாம். இதேவகையிலான அணுகுமுறையும் வெளிப்பாடும் யூதர்களின் ஆட்சியில் காணமுடிகின்றது. உலக அரசியலையும் பிராந்திய அரசியலையும் கையாளுவதன் மூலம் தமது இருப்பினை பாதுகாக்கமுடியுமென்ற வாதத்தினை கொண்டுள்ள இஸ்ரேலியர்கள் போன்றே சவூதி அரேபிய ஆட்சியாளர்களும் காணப்படுகின்றனர். பனிப்போர்க்காலம் முழுவதும் அமெரிக்க எல்லைக்குள் இயங்கிய சவூதி அரேபியா புதிய உலக ஒழுங்கின் உதயத்திற்கான போர்ப் பிரகடனத்தை அமெரிக்கா முன்வைக்கவும், ஈராக், ஆப்கான் யுத்தங்களுக்கும் பின்பு அரபு வசந்தத்திற்கான அடிப்படையை அமெரிக்கா உருவாக்கும் போதும் அமெரிக்காவுடனான முழுமையாக செயல்பட்டது சவூதியரேபியா, சமகாலத்தில் மேற்காசியாவில் ஏற்பட்டுவரும் வல்லரசு மாற்றத்தில் கூட சவூதி அரேபியா அமெரிக்காவுடனேயே பயணிக்கின்றது. ரஷ்யாவின் சிரியாவுடனான உறவும் நெருக்கமும் மேற்காசிய வல்லரசு சமநிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சிரியா, ஈரான், துருக்கி என ரஷ்யாவுடனான மேற்காசியகூட்டு வலுவடைகின்றது.
அதுமட்டுமன்றி எமன் மற்றும் கட்டார் உடனான சவூதி அரேபியாவின் அணுகுமுறை அதிகமான நெருக்கடியை பிராந்திய மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தது. இந்த நாடுகளின் அரசாங்கத்திற்கு எதிரான தீவிரவாதத்திற்கு சவூதி அரேபியா ஆதரவு அளித்து வருவதுடன் பிராந்திய ஆதிக்கத்தை நிறுவுவதில் அதிக கரிசனை கொண்ட நாடாக சவூதி அரேபியா விளங்குகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு மறுபக்கத்தில் இஸ்ரேலிய நட்புறவு இரண்டுமே மேற்காசியாவில் சவூதி அரேபியாவை மேற்காசிய நாடுகளிலிருந்து தனித்துவமானதாக்கியுள்ளது.
ஜமால் விவகாரம் சவூதி துருக்கிய உறவில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது. ஏற்கனவே கட்டார் விவகாரத்திலும் எமன் விடயத்திலும் துருக்கியின் நிலைப்பாடு சவூதி அரேபியாவுக்கு எதிரானது. தற்போது துருக்கி ஈரான் பக்கமும் ரஷ்யாவின் அணியிலும் இணைந்து செயல்படுத்தும் போக்கு மேலும் சவூதிக்கு எதிரான உணர்வை அதிகரிக்க செய்துவருகிறது. ஜமால் விடயத்தில் வெளிப்படையாக சவூதியை குற்றம்சாட்டியுள்ள துருக்கி தற்போது சவூதியரேபியா தூதரகத்தினுள் தனது பொலீஸ்சை விசாரணைக்காக அனுப்பியுள்ளது. சவூதி அரேபியா அதிகாரிகளும் சவூதி தூதரகத்திற்குள் நுழைந்துள்ளனர் என்ற அரசியலை ஏற்படுத்தக்கூடியதாக அமையவுள்ளது.
இதேநேரம் ஜமால் விடயம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சவூதி அரேபிய உறவை பாதிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. பிராந்திய அரசியலை குழப்பியிருப்பது போல் மேற்குலகத்தின் சவூதியரேபிய உறவை பாதிக்குமளவுக்கு நகர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி சவூதி மன்னனுடனான தொலைபேசி உரையாடல் அதனையடுத்து அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பாம்பியோவின் சவூதி விஜயம் என்பன அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. சவூதி மன்னன் சல்மானை சந்தித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் நீண்ட நேரம் இவ்விவகாரம் பொறுத்து உரையாடியுள்ளார்.
இதேநேரம் ஜமால் விடயம் பொறுத்து சவூதியரேபியாவில் நடைபெறவுள்ள நிதி தொடர்பான மகாநாட்டை தாம் புறக்கணிக்கப் போவதாக பிரிட்டன் மற்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. மீண்டும் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஜமால் சவூதி அரேபியாவால் கொல்லப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்டால் அந்நாட்டுக்கு கடுமையான தண்டனை வழங்கப்போவதாக எச்சரித்திருந்தார். தற்போது துருக்கிய பொலிஸாரது சவூதி அரேபிய தூதரகம் மீதான விசாரணையை அடுத்து ஜமால் 07 நிமிடங்கள் சித்தரவதை செய்யப்பட்டு, விரல்கள் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், சவூதி தூதுவர் முன்னாடி நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரத்தை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ள சந்தர்ப்பத்தில் ஒலி, ஒளி ஆதாரங்கள் தம்மிடமுள்ளதாக துருக்கிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் நிதி, வர்த்தகம் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பாக சவூதி அரேபியாவுடன் மேற்கொள்ளவிருக்கின்ற மாநாட்டை கைவிடப் போவதாகவும் தூதரங்களுடாக கண்டன அறிக்கையிடத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வோசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் சவூதி அரேபிய மன்னர் ஆட்சி முறையை விமர்சித்ததற்கும், அதன் கொள்கைகளின் பலவீனத்தை சுட்டிக்காட்டியதற்காகவுமே கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
ஜமால் கசோஜி கொலையானது ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டதன் பிரதிபலிப்பாகவே உள்ளது. அதிலும் தூதரங்கள் இராஜதந்திரப் பணிக்கே அவமானமான செயலாக மாறியுள்ளது. நாடுகளுக்கிடையிலான உறவினை கேள்விக்குட்படுத்தியுள்ள படுகொலை சவூதி அமெரிக்க உறவை பாதிக்குமாக அமையுமா என்பதே முக்கியமான அரசியலாகும்.
ஆரம்பத்தில் அதிக அதிருப்தியை வெளிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி படிப்படியாக அவ்விவகாரத்தை பிற அரசுகள் கையாளாது தாமே கையாளும் நிலையை முன்னெடுத்துள்ளார். அதற்கு இரு நாட்டுக்குமான நீண்ட நட்புறவு மட்டுமன்றி மேற்காசியாவிலும் எண்ணெய் வளத்திலும் நெருக்கமான உறவுள்ள நாடுகளில் சவூதி முதன்மையானது. இந்த வகையிலேயே அமெரிக்காவின் கையாளுகை நிகழ்ந்து வருகிறது. அதனைவிட ஊடகங்கள் பற்றிய ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கையும் அணுகுமுறையும் ஏறக்குறைய சவூதி அரேபியா போன்றே உள்ளது என்பதுவும் கணிக்கப்பட வேண்டியது. காரணம் தூதரகம் சென்றவர் மீண்டுவரவில்லை என்பதே போதுமான ஆதாரமாகும். அதற்கான ஒளிக்காட்சிகளின் பதிவுகள் துருக்கிய அரச கட்டுப்பாட்டில் உள்ளதென்பதும் போதுமானதாகும்.
அதனையும் அதன் பின்பான கூடுதல் தகவல்களையும் வைத்துக் கொண்டு சவூதி அரேபியாகவே அக்கொலைக்கு காரணமென முடிவுசெய்யகூடியதாக அமைந்துள்ளது. ஆனால் ட்ரம்ப் மீளவும் ஆதாரம் கோருவதிலிருந்தும் தமது வெளிவிவகாரச் செயலாளரை சவூதிக்கு அனுப்பியதிலிருந்தும் கூட்டு உபாயமென்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெளிவாகிறது. ஜனாதிபதி ட்ரம்பின் ஊடக சுதந்திரத்தின் இன்னோர் வடிவமாகவே இது அமைந்துள்ளது.
ஐமால் படுகொலை சவூதியுடனான அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்த உதவுவதனை அவதானிக்க முடிகிறது. மேற்காசியா முழுவதும் ரஷ்யா பக்கம் சாய்வதென்பது அமெரிக்க மேற்காசியா உறவின் நெருக்கடியாகும். இஸ்ரேல் பலதடவை ரஷ்யாவுடன் உரையாடிக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவும் இஸ்ரேலுடனான உறவை அரபு நாடுகளுக்கு அடுத்ததாகவே கருதுகிறது. ஆனால் ரஷ்யாவின் முக்கியத்துவம் மேலெழுவதானது இப்பிராந்திய அரசியலை தீர்மானிக்கும் வல்லமையை கொண்டிருக்கும். எனவே சவூதி அரேபியா தொடர்ந்து அமெரிக்காவுடன் பயணிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமெரிக்கா கருதுகிறது. அதற்கான அரசியலை மிக சாதுரியமாக நகர்த்தி வருகிறது.
எனவே, ஜமால் கசோஜியின் படுகொலை உலக ஊடகப் பரப்பை அதிரவைத்தாலும் அரசுகளது உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை. சவூதியும் - அமெரிக்காவும் கூட்டாக இவ்விடயத்தை கையாள முனைகின்றன. துருக்கிய அரசின் அண்மைய போக்குகளில் அமெரிக்க புலனாய்வுத்துறை அதிருப்தி கொண்டுள்ளது. அதனால் சவூதி தனித்து கையாள முனையும் போது ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்க உணர்ந்துள்ளது. சவூதியை பாதுகாப்பதற்கான நகர்வுகளையே ட்ரம்ப் முன்னெடுத்து வருகின்றார். ஜமாலின் படுகொலை வெறும் அரசியலாக மட்டுமேயுள்ளது.