![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/04/06/water2.jpg?itok=7fZnpPGm)
இயற்கை நமக்கு பல்வேறு விதமான வளங்களை தந்துள்ளது. அதாவது மழை வளம், காட்டு வளம், மண் வளம், நீர் வளம் என்பன அவற்றுள் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றுள் மனிதன் மற்றும் உயிர்களின் நிலவுகைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே நீர் வளமாகும். இயற்கை தந்த அற்புதங்களுள் நீர் வளம் மிகவும் முக்கியமானதாகும். நீர் பல வழிகளிலும் மனிதனுக்கும், மனிதனது தொழிற்பாடுகளுக்கும் துணை புரிகின்றது. இந்நீர் வளத்தை பாதுகாப்பது ஆறறிவு படைத்த மனிதர்களாகிய எமது தலையாய கடமையாகும். இதனால் தான் நம்முன்னோர் 'நீரின்றி உலகில்லை' என கூறியுள்ளனர். எனினும் மனிதனின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக இன்று இப்பெறுமதிமிக்க வளம் அழிவடைகின்றது.
அதாவது நீர்வளத்தை மாசுபடுத்தும் பிரதான அம்சம் தொழிற்சாலை கழிவுகளாகும். இன்று உலகில் தொழிற்சாலைகள் இல்லாத நாடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் இத்தொழிற்சாலைக் கழிவுகள் நீர்ச்சூழலுக்கே திறந்து விடப்படுகின்றன. இதனால் நீரானது சுவை, நிறம், மணம் என்பவற்றில் முற்றாக மாறுபடுகின்றது. நீர்ச்சூழலுக்கு தொழிற்சாலைக் கழிவுகள் விடப்படுவதால் நீரில் வாழும் உயிரங்கிகள் அழிவடைகின்றன. இதனால் முழு உயிர்ச்சூழலுக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் தொழிற்சாலைக்கழிவுகள் மாத்திரமின்றி கப்பல்கள் கடலில் செல்வதாலும் பெருமளவான கழிவுகள் நீருக்குள் விடப்படுகின்றன. அவற்றுள் எண்ணெய்க்கழிவுகள் பிரதானமானவைகளாகும். இவற்றினால் நீரானது நுகர்விற்கு உகந்ததற்றதாக மாறுகின்றது. மேலும் விவசாய இரசாயன பதார்த்தங்கள், துப்புரவாக்கிகள், வீட்டுக்கழிவுகள் என்பனவும் உயிர்ச்சூழலை மாசடையச் செய்யும் அம்சங்களாகும்.
நீர் வளம் மாசடைவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நீர் வளத்தை மாசுப்படுத்தாமல் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும். இக்கடமையை சரிவர நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவோமாக!
என்.எஸ்.எப். உமைரா,
தரம் 7B, ப/ வெளிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம்,
வெளிமடை.