நடிகை மீரா மிதுனுக்கு அச்சுறுத்தல் | தினகரன் வாரமஞ்சரி

நடிகை மீரா மிதுனுக்கு அச்சுறுத்தல்

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகையும், மாடலுமான மீரா மிதுன் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

8தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். சென்னையை சேர்ந்த மாடலான இவர், மிஸ் தமிழ்நாடு டிவா 2019என்ற அழகிப் போட்டியை வருகிற ஜூன் 3-ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளார்.  அவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில், இணையதள குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் புகார் அளித்துள்ளார். அதில், அழகிப் போட்டியை தான் நடத்தக் கூடாது என்று அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மிஸ் தமிழ்நாடு போட்டியை நடத்தும் அஜித் ரவியுடன் தான் முன்பு பணிபுரிந்ததாகவும், தற்போது அதில் இருந்து விலகி தனியாக போட்டி நடத்துவதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் கொலை மிரட்டல் விடுப்பதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார். 

அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் மட்டுமல்லாமல், புதுப்புது செல்போன் எண்களில் இருந்தும் மிரட்டல் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பொலிஸாரும் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள மீரா மிதுன், தனது செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களைத் திருடியுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பிவிடப் போவதாக மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.   

Comments