![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/06/15/q1.jpg?itok=X2PVmcEZ)
நீரில் முழுமையாகவோ அரைகுறையாகவோ ஒரு பொருள் மூழ்கி இருந்தால் அந்தப் பொருள் எவ்வளவு நீரை வெளியேற்றுமோ அதன் எடைக்கு சமமாக பொருளின் எடை குறையும் என்பது ஆர்க்கிமிடீஸ் விதி. ஓரடி நிறை, அக, உயரம் கொண்ட ஒரு அலுமினிய கன சதுரத்தின் எடை சுமார் 76கிலோ இருக்கும்.
ஒரு கன அடி நீரின் எடை சுமார் 26கிலோ இருக்கும். அலுமினியம் கனசதுரத்தை நீரில் அமிழச்செய்தால் அதன் எடை 50கிலோவாகக் குறைந்திருக்கும். அலுமினிய கன சதுரம். அலுமினிய கனசதுரம், இந்த எடைக்குச் சமமான நீரை வெளியேற்றுவதுதான் இதற்குக் காரணம்.
மிதப்பாற்றலினால் உண்டாகும் மேல்நோக்கிய ஆற்றல் இதைப் பொறுத்தவரை 26கிலோ ஆகும். வெளியேற்றப்பட்ட நீரின் ஈர்ப்புவிசை மையத்தில் இது செயல்படுகிறது. நீரில் முழுவதுமாக மூழ்குமாறு செய்யப்பட்ட ஒரு பொருள். அதன் அடையைவிட அதிகமான அளவுக்கு வெளியேற்ற முடியுமானால் அந்தப் பொருள் மிதக்கும்.
ஒரு கன அடியுள்ள மரத்துண்டை நீரில் போட்டால் அது நீரில் மிதக்கும். அக்கட்டையின் நீரில், மூழ்கியிருக்கும் பகுதி 22கிலோ எடையுள்ள நீரை வெளியேற்றுவதால் மேநோக்கித் தள்ளும் மிதவை ஆற்றலும் 22கிலோவாக இருக்கிறது. இது கட்டையின் எடைக்கு சமமாகி விடுவதால், இப்போது அது எடையேயில்லாதது போல இருக்கும்.
மிதத்தல் பற்றிய அடிப்படை விதி இது. கப்பல் மிதந்தால் மட்டும் போதாது. பலத்த காற்றடிக்கும்போது சாய்ந்தாலும் பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கவிழ்ந்துவிடும். ஈர்ப்பு மையம் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படியாக கப்பலின் அடிப்பகுதியிலிருக்கும். இது சாய்வை சமன் செய்துவிடுகிறது. கப்பலின் எடைக்கு சரியான நீரை அதை வெளியேற்றும் விதமாகக் கப்பல்கள் வடிவமைக்கப்படுவதாலேயே அவை நீரில் மிதக்கின்றன. ஒவ்வொரு கப்பலுக்கும் இவ்வளவு எடையுள்ள பொருட்களைத்தான் ஏற்றலாம் என்று நிர்ணயித்திருப்பார்கள். கப்பலில் நெடுக்காக உள்ள ஒரு கோடு அளவுக்கு நீர்மட்டம் வந்ததும் மேற்கொண்டு எடையை அதிகரிக்க மாட்டார்கள். இந்தக் கோட்டுக்கு பினிம்சல் போடு என்று பெயர்.
பெ. திலானுஷா,
கொ/பம்பலப்பிட்டி இராமநாதன்
இந்து மகளிர் கல்லூரி,
கொழும்பு 04.