தெரேசா மேயின் அரசியல் சரிவும் போரிஸ் ஜோன்சனின் எழுச்சியும் | தினகரன் வாரமஞ்சரி

தெரேசா மேயின் அரசியல் சரிவும் போரிஸ் ஜோன்சனின் எழுச்சியும்

ஐரோப்பா தொடர்பான சிக்கலில், கன்சர்வேடிவ் கட்சியினரால் பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகிறார் தெரேசா மே. 

மார்கரெட் தாட்சரை போன்று நிலையான ஓர் இடத்தை பிடித்த தலைவர்கள் பட்டியலில் தெரேசாமேயும் இணைகிறார். 

ஜூலை 2016ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் இருக்கும் டவுனிங் தெருவில் அவர் நுழைந்தபோது அவர் என்ன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ நிச்சயமாக அதை ஏற்படுத்த முடியவில்லை. 

அவர் பிரதமராக பதவி ஏற்ற போது கொண்டிருந்த, நாட்டில் பெரிதும் கண்டுகொள்ளாத பகுதிக்கு சென்றடைய வேண்டும், பிரிட்டிஷ் சமூகத்தில் நிலவும் "அநீதிகளை” சரி செய்ய வேண்டும் என்ற கொள்கைகள் எல்லாம் பிரிக்ஸிட் என்ற ஒற்றை வார்த்தையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. 

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் பிரிட்டனின் முடிவு தனக்கு முன் பிரதமராக இருந்த டேவிட் கெமரூன் காலத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பு வாக்கெடுப்பின் முடிவுகளை செயல்படுத்துவதற்காக அவர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சி ஆகியவைதான், தெரேசாமேயின் மூன்று வருட கால பிரதமர் பதவியை விளக்குகிறது.  அவரின் தீவிரமான விமர்சகரும்கூட, ப்ரஸல்ஸ் பேச்சுவார்த்தை மற்றும் நாடாளுமன்றம் கொடுத்த அவமானங்களை கடந்துவந்த தெரேசா மேயின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது. 

பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான போராட்டம் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் பதவி விலகல் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் அவருக்கு பின்னடைவை வழங்கியது. 

கடினமான சூழ்நிலையிலும், தன்னைச் சுற்றி ஏற்பட்டிருந்த குழப்பத்தை கண்டுகொள்ளாமல், நாடாளுமன்றம் மற்றும் தனது கட்சியில் அதிகாரத்தை இழந்தாலும், தனது எம்பிக்களிடம் ”எதுவும் மாறவில்லை” என்று தெரிவித்தும், பிரிட்டன் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். 

அவர் 2017ஆம் ஆண்டு பொது தேர்தலில் அவர் வெற்றிப் பெற்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். 

ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கு வெற்றியுடன் வர வேண்டிய அவர், தனது எம்பிகளின் ஆதரவை இழந்து, வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் ஆதரவை நோக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 

வாக்களிக்க ஒப்புக் கொள்ளும் விதமான ஒரு ஒப்பந்தம் உருவாகும் வரைதான் மே பதவியில் இருக்க வேண்டும் என்று தனது கட்சியினர் விரும்பினர் என்ற அந்த நிலை ஏற்படுத்திய காயத்தில் இருந்து அவர் மீளவில்லை. 

ஒரு தருணத்தில் தன் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க தனது கட்சியின் எம்பிக்களின் ஆதரவை பெற அடுத்த 2022ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தான் பதவி விலகுவதாக உறுதியளிக்க வேண்டியிருந்தது.  பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பல எம்.பிகள் முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை தள்ளி வைத்த அவருக்கு, அவரின் கன்சர்வேடிவ் கட்சி அவர் பதவியில் தொடர்வதை விரும்பவில்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

பிரஸல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்காக ஒப்பந்தத்தை ஆதரித்தால் தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.  ஆனால் அவரால் நாடாளுமன்றத்தில் அந்த வரைவுக்கு ஒப்புதலை பெற முடியவில்லை. 

ஜனவரி 2019இல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அவரின் ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. 

அதன் பிறகு அந்த ஒப்பந்தத்தில் சிறிது மாற்றம் செய்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முயற்சி செய்தார். ஆனால் இரண்டு முறையும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக விரும்பாதவர்கள் அந்த ஒப்பந்தம் மிகவும் கடினமானதாக உள்ளது என்றனர். கடும்போக்கு கன்சர்வேடிவ் கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளிவர இது போதுமானதாக இருக்காது என்று தெரிவித்தனர். 

நாடாளுமன்ற ஒப்புதலை பெற அவர், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பினின் ஆதரவையும் கோரினார்.  ஆனால் ஆறு வாரகால பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. 

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் என்று ஒப்புக் கொள்ள நேர்ந்தது அடுத்த அவமானமாக இருந்தது தெரேசா மேவுக்கு. ஒரு காலத்தில் அது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று என தெரேசா  மே தெரிவித்திருந்தார்.  ஆனால் தற்போது பல எம்.பிக்கள் அவரின் பேச்சை கேட்பதை விட்டுவிட்டனர். தாங்கள் விரும்பும் வகையிலான பிரெக்ஸிட்டுக்கு இவர் தடையாக இருப்பார் என அவர்கள் நினைத்தனர். 

இத்தனை நடந்ததற்கு பிறகு, அவர் நேசித்த பணியில் தொடர முடியாது என அவர் ஒப்புக் கொண்டார். மேலும் டவுனிங் தெருவில் தனது பணி நிறைவடைந்தது என்றும் ஒப்புக் கொண்டார். 

தெரேசமேயின் பதவி விலகலையடுத்து ஆளும் கட்சியான கொன்சரவேர்டிவ் கட்சியின் புதிய பிரதமாராக நியமிக்கப்பட்டார். அந்தகையில் கன்சர்வேடிவ் கட்சியின் (பழமைவாதக் கட்சி) தலைவர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை தோற்கடித்ததைத் தொடர்ந்து ஜோன்சன் பிரதமராகத் தேர்வாகியுள்ளார். 

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், மொத்தமுள்ள 1,59,320 உறுப்பினர்களில் 92,143 பேர் போரிஸ் ​ேஜான்சனுக்கு வாக்களித்தனர். இதில் ஜெர்மி ஹண்ட்டுக்கு 46,656 வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் ​ேஜான்சன் பெற்ற வாக்கு சதவீதம் 66.4%. ஜெர்மி ஹண்ட் பெற்ற வாக்கு சதவீதம் 33.6% .  போரிஸ் ​ேஜான்சன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். 

அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன. 

தி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக போரிஸ் ​ேஜான்சன் பணியாற்றியுள்ளார். குழப்பவாதியாக போரிஸ் ஜோன்சன் அறியப்படுகிறார். 

இவர் பத்திரிகை துறையில் இருந்தபோது, உள்ளூர் அதிகாரிகளால் ஒருபாலுறவு ஆதரவு பிரசாரங்களை ஊக்குவிக்கும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளை கேள்வியெழுப்பினார். பின்னர், அரசியலில் நுழைந்தவுடன், பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களில் அரசு தலையிடகூடாது என்று தன் நிலைப்பாட்டை மாற்றினார். 

2001ல் ஹென்லி-ஆன்-தேம்ஸ் என்ற நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்பி ஆனார் போரிஸ் ​ேஜான்சன். 2001லிருந்து 2008 வரை 7 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2008ல் லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ்  ​ேஜான்சன் வெற்றி பெற்றார். 2008 லிருந்து 2016 வரை 8 ஆண்டுகள் லண்டன் மேயராக பதவி வகித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் யூக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தென்  ரூய்லிப்பின் எம்.பியாக நான்குகாண்டுகள் இருந்தார். 

பிரதமராவதற்குமுன், இரண்டாண்டுகள் (2016லிருந்து 2018 வரை) வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்தார்.   

Comments