![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/31/kittttttt.jpg?itok=_bkgm016)
மௌனம் என்பது பேசாமலிருப்பது மட்டுமல்ல, எண்ணங்களற்று இருப்பது ஆகும். இந்த நிலையில் நாம் மனதைப் பழக்கும்போது மன அலை சுழல் வேகம் குறைந்து குறைந்து நுண்ணிய நிலைக்கு வருவதால் பிரபஞ்ச இரகசியங்கள் அனைத்தும் தெளிவாக நம் அறிவுக்குப் புலப்படும். மேலும், எல்லா தோற்றங்களுக்கும் மூலமான இயற்கை நிலையையும் அறிந்துகொள்ள முடியும். அதுவே முழுமையானது. தோற்றங்கள் அனைத்தும் அதன் பகுதியே என்பதும் உணர்ந்துகொள்ள முடியும். மனதுக்கு உட்பொருளாய் அப்பரம்பொருளை செயற்படுவதும் உணரமுடியும். மேலும், மௌனம் என்பது இயற்கையின் மொழி. அதை நாம் பழகிக்கொண்டால் இயற்கையின் விதிகளை எளிதாக நாம் அறிந்துகொள்ள முடியும். இயற்கையே தோற்றங்களாகவும் எல்லா உயிர்களாகவும் இருப்பது உணரும்போது நம்முள் அன்பும் கருணையும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.
சோ. வினோஜ்குமார்,
தொழினுட்பபீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.