![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/30/late2.jpg?itok=K3Tn4k_c)
ஒத்திப்போடுவது என்பது ஒரு திருடன்போல. அது நேரத்தை மட்டுமல்ல, யோசனைகளையும் திருடுகிறது. ஒரு மிக நல்ல யோசனை இருந்தாலும், அதைத் தாமதப்படுத்தும்போது, அந்த உற்சாகம் மறைந்துவிடும். யாருக்குத் தெரியும் நீங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த வாய்ப்பைக் கூடத் தொலைத்திருக்கலாம்.
தள்ளிப்போடுவது என்பது எண்ணங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துவதும்தான். நம்மில் பலர் இதை அடிக்கடி செய்கிறோம். மிகப் பெரிய மனிதர்களையும், சாதாரண மனிதர்களையும் வித்தியாசப்படுத்தும் ஒரு விஷயம் அவர்கள் நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதுதான்.
எப்படி யோசனைகளை செயல்படுத்துகிறார்கள் என்பதுதான். இன்றுமுதல் நெடுநாட்களாக நீங்கள் செய்ய நினைத்த விஷயங்களைச் செய்யப் போகிறீர்கள். செய்யாமல் விட்ட வேலை மனதிலும் பெரும் சுமையாக இருக்கும். நீங்கள் விட்டிருந்தால், அது மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும்.
சோ. வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.