கணினி | தினகரன் வாரமஞ்சரி

கணினி

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்றைய உலகம் கணினி மயமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கணினியின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிலையங்கள், தொழில்துறைகள் என எங்கும் கணினி மயமாகிவிட்டது.

இது மாத்திரமன்றி, வசதி படைத்தோர் வீடுகளிலும் பாடசாலைகளிலும் கணினியின் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. அத்தகைய கணினி பொறி பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

1642ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பிளெஸ் பஸ்கால் என்பவர் சாதாரண கூட்டல் பொறிமுறையொன்றைக் கண்டுபிடித்தார்.  இதைத்தொடர்ந்து கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணித செயற்பாடுகளுக்கும் உதவும் வகையில் 'கல்குலேற்றர்'  என அழைக்கப்படும் பொறிமுறையை ஜேர்மனின் கணித மேதை கொற்பிறீட் லைப்நிற்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

இன்றைய நவீன கணினி உருவாக்கத்திற்கு வழிகோலாக இருந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த கணித பேராசிரியர் சார்ள்ஸ் பபேஜ் ஆவார்.  கணினி மூலம் நாம் பல்வேறு  பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  கடிதங்கள் அச்சுப் பிரதிகள் (Printer), மின் அஞ்சல் (Email),  இதுபோன்ற  இன்னோரன்ன தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

ஐ. அம்மார் ஹஸன்,
தரம் 05,  கொ/ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி,
கொழும்பு  12.

Comments