நமது நாடு | தினகரன் வாரமஞ்சரி

நமது நாடு

எமது நாடு இலங்கை. இந்து சமுத்திரத்தின் மத்தியில் நாற்புரமும் கடலால் சூழப்பட்டு காணப்படும் ஓர் அழகிய தீவாகும். இயற்கை வளங்களை கொண்ட நம் நாட்டில், ஏராளமான பிரசித்தி பெற்ற இடங்களும், வணக்கஸ்தலங்களும் காணப்படுகின்றன. நம்நாட்டில் முக்கியமாக தேயிலை, இறப்பர், தென்னை போன்ற தாவரச்செய்கைகள் அதிகமாக காணப்படுகின்றன. 

இலங்கையை தம்பன்னி, செரண்டிப், தப்ரபேன், சீல துவீபம், சீலயி, செயிலான், செயிலாவோ, சிலான், சிலோன், ஈழம் என பல பெயர்களால் அழைப்பதுண்டு. இலங்கையின் மொத்தப்பரப்பளவு 65610சதுர கிலோமீற்றராகவும் மொத்த நீளம் 433கீலோ மீற்றராகவும் மொத்த அகலம் 226கீலோ மீற்றராகவும் காணப்படுகின்றது.  

இலங்கையின் வரலாற்றை நாம் தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற காவியங்களினூடாக அறியலாம். இலங்கையின் உயரமான மேட்டு நிலமாக ஹற்றனும் உயரமான குன்றாக கொக்காகல குன்றும் உயரமான அணைக்கட்டாக விக்டோரியா அணைக்கட்டும் உயரமான மலையாக பேதுருதாலகால மலையும் உயரமான நீர்வீழ்ச்சியாக பம்பரகந்த நீர்வீழ்ச்சியும் காணப்படுகின்றது. 

இலங்கையின் தேசிய வனமான சிங்கராஜ வனத்தில் இலங்கைக்கே உரித்தான தாவரங்களும், அதிசய தாவரங்களும் வளர்கின்றன. இலங்கையின் தேசிய மரம் நாகமரமும் தேசிய மலர் அல்லி மலரும் தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டமும் தேசிய பறவையாக காட்டுக்கோழியும் விளங்குகின்றன. 

சுஸ்மிதன் ஆனந்தன், 
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், 
நோர்வூட்.  

Comments