கபடி வீராங்கனையாக களமிறங்கும் கங்கனா | தினகரன் வாரமஞ்சரி

கபடி வீராங்கனையாக களமிறங்கும் கங்கனா

பொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், கபடி வீராங்கனையாக களமிறங்க இருக்கிறார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'தலைவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.  

இந்த படத்துக்கு பாகுபலி, மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  

இந்நிலையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள ‘பங்கா’ என்ற படத்தில் முதன்மை வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் திகதி வெளியாகவுள்ளது.     

Comments