பசுவும் கன்றும் | தினகரன் வாரமஞ்சரி

பசுவும் கன்றும்

அன்பாய் பசுவும் அழைத்திடும்   
அருகில் சேயைத் தேடிடும்   
கன்று துள்ளி ஓடும்   
களிப்பாய் பாலைக் குடித்திடும்   
  
கனிவு கொண்டு கன்றினை   
நாவால் நக்கித் தடவிடும்   
கன்று பாலை விரும்பிடும்   
குதித்து வாலைத் தூக்கிடும்   
  
தாய் காட்டும் அன்பினை   
சேய் கண்டு மகிழ்ந்திடும்   
தாயின் முதுகில் ஏறியே   
தாவித்தாவிப் பாய்ந்திடும்   
  
புல்லை விரும்பி உண்டிடும்   
மெல்ல அசை போட்டிடும்   
பசுவின் அருகில் கன்று   
படுத்துத் தூங்கிக் கொள்ளும்..!   
 
எம்.எம்.எப். றிஸ்னா,   
தரம் 04, கமு/சது/அல் ஹம்றா வித்தியாலயம்,   
செந்நெல் கிராமம்,   
சம்மாந்துறை.   
 
 

Comments