பள்ளிக்கூடம் போகலாமே
சின்னப்பாப்பா
நிறைய பிள்ளைகளோடு
பழகலாமே சின்னப்பாப்பா..!
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்னப்பாப்பா
தோட்டம் அந்தப் பள்ளிக்கூடம்
சின்னப்பாப்பா..!
பள்ளிக்கூடம் திறந்தாச்சு
சின்னப்பாப்பா
உனக்கு நல்ல நேரம் பிறந்தாச்சு
சின்னப்பாப்பா..!
வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம்
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்..!
உடலும் மனமும் வளர்வதற்கு
சின்னப்பாப்பா
ஏற்ற இடமே பள்ளிக் கூடம்
சின்னப்பாப்பா..!
அஸ்மா பாரிஸ்,
மள்வானை.