​சோம்பல் மிகக் கெடுதி | தினகரன் வாரமஞ்சரி

​சோம்பல் மிகக் கெடுதி

சோம்பலானது மனிதனுடைய சீரான வாழ்வினைக் கெடுத்துவிடும். சோம்பேறியாக இருந்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. வாழ்க்கையிலும் முன்னேறமுடியாது. சுறுசுறுப்பாகச் செயற்பட்டால் சமூகத்தில் உயர்நிலையை அடையலாம். சுறுசுறுப்பு உள்ளத்தையும் உடலையும் சீராக்கும். வாழ்க்கையில் முன்னேறி வெற்றிப்படிகளை எட்டிப் பிடிக்கலாம். சோம்பேறிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததாக வரலாறுகளே இல்லை.  

எனவே மாணவர்களாகிய நாம் சோம்பலை ஒழித்து உற்சாகமாக இருக்க வேண்டும். சோம்பல் மிகக் கெடுதி பாப்பா என பாரதியார் பாடியிருக்கிறார். எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால் சோம்பலை விரட்டியடிப்போம்!  

அப்துல் ரசாக் பாத்திமா ரஸ்மினா,  
தரம் 11, ப/ அல் இர்ஷாட் மகா வித்தியாலயம்,  
ஹாலி எல.

Comments