உந்துருளி ஓடுகின்ற அண்ணா
ஒருநிமிடம் என்கதையைக் கேளு
சந்திதெரு பார்த்து நீயும்ஓடு
சடுதியாக ஆபத்து வரலாம்
(உந்துருளி)
ஏரோப்பிளேன் ஓட்டமது வேண்டாம்
இங்கிலீசுப் படஸ்ரையிலும் வேண்டாம்
முந்தியோடும் ஆசைகளும் வேண்டாம்
மோதியெழும் விபரீதம் வேண்டாம்
(உந்துருளி)
பாதையிலே வாகனங்கள் ஓட
பலநூறு விதிமுறைகள் உண்டு
நீயதனை சரியாக அறிந்து
நிதானமாய் பயணிக்க வேண்டும்
(உந்துருளி)
அவதானம் பலஉயிரைக் காக்கும்
அலட்சியங்கள் விபரீதம் சேர்க்கும்
வேதனையை வலிந்திழுக்க லாமோ
வேகத்தில் விவேகத்தைக் காட்டு
(உந்துருளி)
ஷெல்லிதாசன்,
திருகோணமலை.