![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/22/q16.jpg?itok=XT4NMK9r)
வாழ்க்கையை இன்பமாய் என்றும் நீ
வாழ்ந்து இரசித்திட முனைந்திடுவாய்
வாசித்து இன்பமாய் வாழ்ந்திடுவாய்
வானகம் வரை நீ உயர்ந்திடுவாய்
ஆழமான கிணற்று நீரின் சுவையை
அறிந்திடுவாய் வாசித்து இன்பம்
அடைந்திடுவாய் வாழ்க்கையின் புதிர்களை
அறிந்திடுவாய் வாசித்து இன்பம் பெற்றிடுவாய்
நொடி நொடிக் கணைகளை வாசித்து
நொடிக்கொரு பொழுதைக் கழித்திடுவாய்
நகைச்சுவை தன்னை வாசித்து
நளினங்கள் பலவும் செய்திடுவாய்
நயம்படக் கதைகளை வாசித்து
நாடு புகழ்ந்திட வாழ்ந்திடுவாய்
நூல்கள் பலவும் வாசித்து
நாட்டினில் உயர்வைப் பெற்றிடுவாய்..!
ச. பவித்திரா,
யாழ்ப்பாணம்.