![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/05/31/ea218ce350f34607b2641a60b9009a86_XL.jpg?itok=-ZdAEPJL)
நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சரும் புதிய ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்ைக ஐம்பது வருடங்களை எட்டியுள்ளது. அவரின் அந்த நீண்ட அரசியல் பயணத்தை கௌரவிக்கும் முகமாக கொரோனா தொற்றுக்கு நாடு முகங்கொடுத்துள்ள விதம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சமூக, அரசியல் பொருளாதார பாதிப்புகள் பற்றிய அவருடனான நேர்காணல்.
கேள்வி: கொரோனா தொற்றுக்கு எதிராக நடவடிக்ைக எடுக்கும்போது நாம் தற்போது உள்ள இடத்தைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?
பதில்: ஒரு நாடாக நாம் அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வருகின்றோம். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம். தற்போது வௌிநாடுகளிலிருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தல் முகாமிலுள்ள கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களும் தொற்றாளர்களாக அறியப்படுகின்றார்கள். மரண எண்ணிக்ைக மிக குறைந்த மட்டத்தில் காணப்படுவதோடு தற்போது வௌிநாடுகளிலிருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தல் முகாமிலுள்ள கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களும் தொற்றாளர்களாக அறியப்படுகின்றார்கள். மரண எண்ணிக்ைக மிக குறைந்த மட்டத்தில் காணப்படுவதோடு தற்போது குணமடையும் நோயாளர்களின் வீதமும் அதிகரித்துள்ளன. இவ்வேளையிலும் விவசாயம், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை மற்றும் மீன்பிடி தொழில் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு அவற்றை மேற்கொண்டதால் அத்துறைகளில் புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
அடுத்ததாக எமக்குள்ளது பொது தேர்தலாகும். மக்களின் அந்த ஜனநாயக உரிமையை, சர்வஜன வாக்குபலத்தை பாதுகாக்க வேண்டும். தற்போது இவ்விடயம் நீதிமன்றத்திலுள்ளது. சுகாதார பிரிவினரால் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான பரிந்துரைகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: ஆனால் இங்கு அரசாங்கம் இவ்விடயங்களில் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்களே?
பதில்:வெற்றியோ தோல்வியோ அதனை தீர்மானிக்க அளவுகோல் தேவை. ஒன்று மரணங்கள் கூடி குறைதல் போன்ற அளவு, அதைப்பற்றி கதைக்காமல் வெறுமனே தோல்வியடைந்துள்ளதாக கூறுகின்றார்கள்.
கேள்வி: நாம் உலக நிலைமையை நோக்கினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முகங்கொடுத்துள்ள நிலைமைகள் தெளிவாக தெரிகின்றன. சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் இந்த சவாலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளமை தெரிகின்றது. இதுபற்றிய உங்களுடைய கருத்தென்ன?
பதில்: அமெரிக்கா மற்றம் ஐரோப்பா ஆகிய நாடுகள் கொரோனா வருவதற்கு முன்னரே பொருளாதார பின்னடைவை சந்தித்திருந்தன. தற்போது இந்த தொற்று நோய் காரணமாக மேலும் பின்னடைவுக்கு செல்கிறார்கள். சீனா மூன்று மாத காலத்துக்கு ள் இந்த சவாலை வெற்றிகொண்டுள்ளது. அதுபோலதான் வியட்நாமும் இலங்கையும் அவ்வாறே வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளன. அதற்காக அந்நாடுகள் பெருமளவு வளங்களை பயன்படுத்தினார்கள். ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்யவில்லை. இலங்கையில் சுகாதார நடவடிக்ைககள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. அது எமது வெற்றிக்கு வழிவகுத்தது. நோயெதிர்ப்பு சக்தியும் இதற்கு காரணமாகும்.
கேள்வி: தொற்று நோயை கட்டுப்படுத்தும் வேளையிலேயே பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து முன்னேறி செல்ல சில நாடுகள் முக்கிய நடவடிக்ைககளை எடுத்து வருகின்றன. நாமும் கட்டம் கட்டமாக அதில் ஈடுபட்டு வரும் பின்னணியில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் என்ன?
பதில்: பொருளாதார செயல்பாடுகள் குறித்து வெளி மற்றும் உள்ளக ரீதியாக கவனம் செலுத்த வேண்டும். கடந்த மூன்று மாத காலமாக எமது ஆடை கைத்தொழில், சுற்றுலாத்துறை என்பன பாரியளவு பாதிப்படைந்துள்ளன. இவற்றைப் போன்று ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவோர்களால் கிடைத்த அந்நிய செலாவனி எமக்கு பெரும் பலமாக இருந்தது. இன்று அவை அனைத்துக்கும் இந்நிலைமை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவாலுக்கு முகங்கொடுப்பதோடு அதற்கான வழிவகைகளை உருவாக்குவதையும் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக எமது மீன்பிடித் துறையினர் ஏற்றுமதியில் ஈடுபட்டார்கள். ஆடை கைத்தொழிலாளர்கள் சுகாதார பாதுகாப்பு உடை மற்றும் முகக் கவசங்களை தயாரிக்க தொடங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக எமது தேயிலை நல்ல விலை கிடைத்தது. அது இந்நாட்டில் சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்ததோடு பொருளாதாரத்துக்கு பெரும் சக்தியாக அமைந்தது.
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான இன்னும் மூன்று மாதங்களாது தேவைப்படும். அதற்காக புதிய ஆரம்பத்தை ஏற்படுத்த வேண்டும். புதிய நிலைமைக்கு ஏற்றவாறு ஹோட்டல்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். இத்தொற்று நோயால் ஏற்பட்ட பொளாதார பாதிப்பு காரணமாக உலகில் அநேகமானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள்.
வேலை இல்லாமற் போகாதவாறு அரசாங்கம் தலையிட்டு பார்த்துக்ெகாண்டுள்ளது. வேலைதளங்களில் மூன்றிலொரு பணியாளர்களே பணிக்காக அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படும். யாரும் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள். வேலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்ைககளை எடுத்திருக்கும் வேலையில் எதிர்க்கட்சியின் முச்சக்கரணவண்டி மூலம் வாழ்க்ைக நடத்துபவர்களின் வேலை பறிபோயுள்ளதாக கூறுகிறார்கள்.
கொழும்பு- கம்பஹா மாவட்டங்களில் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வாறு இ ல்லை. வழமைபோன்று இச் சேவைகளை வழங்குவதிலுள்ள பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு அரசாங்கத்துக்கு உள்ளது. இத்தொழில் ஈடுபடுபவர்களுக்கு லீசிங் தவணை பணத்தை செலுத்துவதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியது. 5000 ரூபா கொடுப்பனவை வழங்கியதும் இது பற்றி அறிந்திருந்ததனாலாகும். எத்துறையிலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிரமங்கள் காணப்படும். அது ஏனைய நாடுகளுக்கு போன்று எமக்கும் பொதுவானதாகும். நாம் அதனை புரிந்துகொண்டுள்ளோம். கொழும்பு பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின் இவர்களின் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
கேள்வி; 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்ெகாடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்ைகயை எதிர்க் கட்சியினர் விமர்சனம் செய்கின்றார்கள். ஏன் அவ்வாறு நடக்கின்றது?
பதில்;அன்றாடம் வருமானம் பெற்று வாழ்க்ைக நடத்தும் எமது மக்களை பற்றி எண்ணி அவர்களின் சிரமத்தை ஓரளவாவது குறைக்கவே 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஏப்ரல்,மே இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட்டது. அதைத் தவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், சமுர்த்தியாளர்களுக்கு அந்த நிவாரணம் அளிக்கப்பட்டது.
அதனை நாம் அவர்களின் சிரமங்களை புரிந்துகொண்டதால் தான் வழங்கினோம். மக்களுக்கான அந்நடவடிக்ைககள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு பெரும்பலமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே செய்தோம்.
கேள்வி: உலகளாவிய ரீதியில் முகங்கொடுக்க வேண்டிய சவால்களுடன் நோக்கினால் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் மற்றும் வளர்ச்சியடையவும் செய்ய வேண்டும். அதற்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்ைககள் என்னவென்று கூற முடியுமா?
பதில்: எமது உணவை நாமே உற்பத்தி செய்வது முக்கியம் என்பதோடு தேவையுமாகும். இவ்வாறான பிரச்சினையின்போது அதன் முக்கியத்துவம் நன்றாக புரிகின்றது. அதை புரிந்துகொண்டு வீட்டுத் தோட்டங்கள் தொடக்கம் விவசாயத் துறையில் 'சபீட்சம்' திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு நல்ல
ஆதரவு கிடைத்து வருகின்றது. பயிர்ச் செய்வதற்காக விதைகள், உரம் போன்று பயிர் பாதிப்புக்கான காப்புறுதி, உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வசதி போன்று வங்கிகடன் போன்ற வசதிகளும் இதன் கீழ் வழங்கப்படுகின்றது.
உற்பத்திகள் பலவிதமாதல், ஒரே மாதிரியான பயிர்களை பயிர் செய்வதால் மேலதிகமாக பயிர்கள் உற்பத்திகள் செய்யப்படுகின்றன. அதனால் சந்தை தேவைக்கு ஏற்றவாறு பயிரிடுதல் போன்றவற்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
கேள்வி: அவசியமான மற்றும் அவசியமற்ற பொருட்கள், எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களைக் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்தல் நடவடிக்ைககளின் முக்கியத்துவம் எவ்வாறானது?
பதில்: அத்தியாவசியமான விடயமாகும். இவற்றின் இறக்குமதியை நிறுத்தி அவற்றை இங்கு உற்பத்தி செய்வது போன்ற நடவடிக்ைககளைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரை ஊக்குவிக்க சலுகை கடன் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏற்றுமதி மூலம் நாம் பெறும் வருமானத்தை அத்தியாவசியமற்ற இறக்குமதிகளுக்காக செலவிடுவதை தடுப்பதற்கு இந்நடவடிக்ைகக்கு அவசியமானதாகும். சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. எண்ணெய் விலை குறைந்த மட்டத்திலுள்ளதோடு, நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் வழிகள் குறைவடைந்துள்ள வேளையில் அநாவசியமாக எமது அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்ைக எடுப்பதன் மூலம் எமது நாட்டு பொருளாதாரம் வலுவடையும்.
கேள்வி: அரசாங்கத்தால் உள்ளூர் தொழில்முனைவோருக்கு விசேடமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளுக்கு பெற்று கொடுப்பதாக கூறப்பட்ட கடன் வங்கிகளால் அவ்வாறான சலுகையில் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது அதற்காக என்ன நடவடிக்ைக எடுக்கப்படவுள்ளது?
பதில்: அரசாங்கம் அந்த கொள்கையளவிலான முடிவை எடுத்தால் அரச மற்றும் தனியார் வங்கிகள் அச்சலுகைகளை மக்களுக்கு பெற்று கொடுக்க வேண்டும். அவ்விடயம் தொடர்பாக மத்திய வங்கி ஆராயும். கடன் வழங்கும்போது பிணைகளை கேட்பது வங்கி நடைமுறையாகும். அவர்கள் பாதுகாப்பை எதிர்பார்ப்பார்கள். எவ்வாறாயினும் கடனுக்கான சலுகை வட்டி வீதம் போன்ற செயற்பாடும் பின்பற்றப்படும்.
கேள்வி: தற்போது தேர்தல் நடத்துவது தொடர்பான விடயத்துக்காக நீதிமன்றம் சென்றுள்ள வேளையில் நீதிமன்ற நடவடிக்ைககள் பற்றியல்லாது, தேர்தல் பற்றி எதிர்க் கட்சியினர் கூறும் விடயங்கள் குறித்த உங்களது கருத்தென்ன?
பதில்: எதிர்க் கட்சியினர் கூறும் விடயங்கள் பரஸ்பரம் விரோதமானது. அரசாங்கம் பணத்தை அச்சடிக்கின்றார்கள் என்று கூறினார்கள். 5 ஆயிரம் ரூபா போதாது என கூறினார்கள். வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா லஞ்சம் என்று கூறுகிறார்கள். மனித உயிரை மதிக்காது தேர்தல் நடத்தப் போகிறார்கள் என்று கூறுகின்றார்கள். இவை எல்லாமே பரஸ்பரம் விரோதமானவையாகும். இந்த தொற்று நோய் சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்ைககளுக்கு, நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க, கொரோனா பரவலை தடுக்க என பல செலவுகளை செய்ய வேண்டியுள்ளதுடன் சுகாதார பிரிவினர் வழங்கும் பாதுகாப்பு நடவடிக்ைககளை செயல்படுத்தி தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. அதற்கான செலவையும் செய்ய வேண்டியுள்ளது.
ஜுலை இறுதியிலோ ஆகஸ்ட் தொடக்கத்திலோ தேர்த்தல் இடம்பெற சந்தர்ப்பம் உண்டு. எவ்வாறாயினும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஆரம்பித்த முதல நாளிலேயே தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்ைககளை மேற்கொள்வது தேர்தல் ஆணைக்குழுவின் உரிமை என கூறியுள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேர்தல் நடத்தப்படவேண்டிய தினம் அறிவிக்கப்படும். அப்போது இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
கேள்வி: கொரோனா தொற்று உலகமே இதுவரை வந்த பாதையை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. நாட்டிற்கு புதிய தலைவரை தெரிவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் பொது தேர்தலிலும் அதனை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆட்சியை உருவாக்க வேண்டிய வேளை வந்துள்ளது. எமது நாட்டில் அதற்கான ஈடுபாட்டை எவ்வாறு காணுகின்றீர்கள்?
பதில்: 2015ம் ஆண்டளவில் எமது மொத்த தேசிய உற்பத்தி 79 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்திருந்தது. கடந்த அரசாங்கம் 5 வருட காலத்தில் அதனை 85 பில்லியன் டொலராக மாத்திரமே அதிகரித்திருந்தது. தனி மனித வருமானம் 2015 அளவில் மகிழ்ச்சியடைய கூடிய வகையில் இருந்தது. அதன் பின்னரான வீழ்ச்சி போன்று தற்போது கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேவையான திட்டங்களை வகுக்கும் தலைமை எமது அரசுக்கு உண்டு. எமது நோக்கு மக்களை மையப்படுத்திய அபிவிருத்தியாகும்.
அங்கு புதிய உற்பத்திகள், ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த தொற்று வேளையிலும் புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. நீர் வழங்கல் துறையை எடுத்துக்ெகாண்டால் நீர் குழாய்களின் உள்ளே படியும் துருவை அகற்ற எமது இளைஞரொருவர் ரொபோ தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியிருந்தார். அவ்வாறானவர்கள் மீது பொறாமைபடாமல் அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
தம்மிக்க செனவிரத்