![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/08/31/a22.jpg?itok=xFOJt6pv)
தமிழ் நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த கவிஞர்களில் ஒருவர் கவிமணி சுப்பிரமணிய பாரதி. இவர் தனது கவிதைகள் மூலம் தமிழகத்தையே உலகறியச் செய்தவர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திக்கெல்லாம் புகழ்பெற்ற திருநெல்வேலியிலுள்ள எட்டயபுரம் என்னும் சிற்றூரில் சேற்றில் மலர்ந்த செந்தாமரையைப் போல அவதரித்தார். சின்னச்சாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1822ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி பிறந்தார். ஐந்து வயதில் தன்னருமை தாயாரை இழந்தார். பின் தந்தையிடமிருந்த அரிய நூல்களை கற்றார். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றார். எனினும் பள்ளிப் படிப்பில் அவருக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. துள்ளித் திரியும் பருவத்தில் கல்லூரி செல்லாமல் வானம்பாடியாக கானம் பாடிக்கொண்டு இயற்கையின் எழிலை ரசித்துக் கொண்டு வாவி குளக் கரைகளில் சிட்டுக்குருவிபோல் பறந்து திரிந்தார்.
எழுச்சி எண்ணங்களும் புதுமையான சிந்தனைகளும் கொண்ட பாரதி பல கவிப்பாக்களை இயற்றினார். அத்தோடு பாப்பாக்களுக்கும் சிறுவர் கவிகள் எழுதி குழந்தைகளின் உள்ளத்தையும் ஈர்த்தார்.
பெண் அடிமையைக் கண்டு பொங்கியெழுந்து பெண் விடுதலை கவிதைகளை எழுதி பாரத மக்களை தன் கவிகளால் தட்டி எழுப்பினார்.
விடுதலை கவிதைகளை வீரம் பொங்க எழுதி தமிழர்களை தலைநிமிர வைத்தார். விடுதலை கவிதைகளை வீரமாக எழுதி சுதந்திர தாகத்தை வலியுறுத்தினார். இத்தகைய அமரகவி 1921ம் ஆண்டு புரட்டாதி மாதம் அமரத்துவம் அடைந்தார். தமிழ் மொழி வாழும்வரை பாரதி வாழ்வார். அவரின் இனிய காவியங்களும் வாழும்!
என்.கே. வேணி,
பலாங்கொடை.