![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/09/28/a29.jpg?itok=mc6-5t_P)
இலங்கையில் உயர்கல்விச் சேவைகளை வழங்குவதில் தனியார் துறையில் முன்னிலையில் திகழும் கல்வியமான ICBT கம்பஸ், பிரித்தானியாவின் கார்டிஃவ் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்தின் உயர் டிப்ளோமாவை நேரடியாக தொடர்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இலங்கையின் மாணவர்களின் நலன் கருதி, இந்த கற்கையை நேரடியாக இலங்கையின் ICBT கம்பஸில் தொடர்வதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயர் டிப்ளோமா கற்கைகள் பிரித்தானிய நிலை 5ஆக அமைந்திருப்பதுடன், கார்டிஃவ் மெட் பல்கலைக்கழகத்தினால், உள்ளக ஐக்கிய இராஜ்ஜிய தகைமைகளில் ஒன்றாக வழங்க முன்வந்துள்ளது.
2021கார்டியன் பல்கலைக்கழக லீக் அட்டவணையில் கார்டிஃவ் மெட். 72ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஐக்கிய இராஜ்ஜியத்தினால் வழங்கப்படும் நேரடி பல்கலைக்கழக தகைமையாக அமைந்திருப்பதால், கார்டிஃவ் மெட். பல்கலைக்கழகத்தின் உயர் டிப்ளோமாவை ICBT கம்பஸில் தொடரும் மாணவர்களுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் சிறந்த உயர் கல்வியை தொடர முடியும். இலங்கையில் அதிகளவு கேள்விகள் நிலவும் பல கற்கைகளை ICBT கம்பஸ் அறிமுகம் செய்துள்ளதுடன், இந்த ஐக்கிய இராஜ்ஜியத்தின் நேரடி உயர் டிப்ளோமா என்பது, ஐக்கிய இராஜ்ஜிய பல்கலைக்கழக கற்கை ஒன்றுக்கு உள்வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
அனுமதிக் கடிதம் மற்றும் பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியன கார்டிஃவ் மெட். இனால் வழங்கப்படுவதுடன், பல்கலைக்கழகத்தின் பல வளங்களை ஒன்லைன் ஊடாக அணுகக்கூடிய வசதிகளும் வழங்கப்படும். ICBTஇல் கார்டிஃவ் மெட். உயர் டிப்ளோமாவை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு, ஐக்கிய இராஜ்ஜியத்தில் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவில் பங்குபெறக்கூடிய வாய்ப்பும் வழங்கப்படும். இலங்கையில் இந்த வசதியை வேறெந்தவொரு உயர் டிப்ளோமா அல்லது உயர் தேசிய டிப்ளோமாவும் வழங்குவதில்லை.
வியாபார முகாமைத்துவம், மென்பொருள் பொறியியல், வலையைமப்பு, உளவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற பிரிவுகளில் ICBT கம்பஸில் கார்டிஃவ் மெட் உயர் டிப்ளோமாக்கள் வழங்கப்படுகின்றன.