![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/10/25/a15.jpg?itok=AaTEUbBc)
மங்காத் தமிழின் மகாகவி
மறைந்தும் மறையா வான்மதி அவன்
தங்கத் தமிழின் தலைவனடா
தவமாய் கிடைத்த கவிஞனடா..! (மங்கா..)
எட்டய புரத்தில் பிறந்தவனாம்
இயற் பெயர் சுப்பிர மணியனுமாம்
பதினோர் அகவையில் பாரதியாய்
பட்டமும் பெற்று புகழடைந்தான் (மங்கா..)
புரியாக் கவிதைப் பாதையினை
புரியும் வண்ணம் திசைமாற்றி
எளிமையான கவிபடைத்தான்
என்றும் வாழும் கவியானான் (மங்கா..)
பாப்பா பாட்டுப் பாடிவைத்தான்
பாவையர் உரிமைக் குரலானான்
ஏற்றத் தாழ்வு மக்களுக்குள்
இனியும் வேண்டாம் எனச் சொன்னான் (மங்கா..)
வீர சுதந்திரம் வேண்டி நின்றான்
வித்தைகள் ஆயிரம் பயிலென்றான்
ஊருல கெல்லாம் பொதுவென்றான்
உதய ஞாயிறு போலெழுந்தான். (மங்கா..)
ஷெல்லிதாசன்,
திருகோணமலை.