![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/11/01/a26.jpg?itok=15ktGtCb)
மழை வருது மழை வருது
மலர்விழி நீ ஓடி வா
மழை வருது மழை வருது
மெளனமாக ஓடி வா
மழைத்துளி விழுது மழைத்துளி விழுது
மாலினி நீ ஓடி வா
இடி இடிக்குது இடி இடிக்குது
இங்கே நீ ஓடி வா
இடி இடிக்குது இடி இடிக்குது
இலகுவாக நீ ஓடி வா
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குது
மிதுனன் நீ ஓடி வா
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குது
நீ மின்மினி போல் ஓடி வா
காற்றடிக்குது காற்றடிக்குது
காவியா நீ ஓடி வா
காற்றடிக்குது காற்றடிக்குது
கலங்காமல் நீ ஓடி வா
கற்றதை நீ மறக்காமல்
பாடிக்கொண்டு ஓடி வா
பாலர் நாங்கள் ஒன்று சேர்ந்து
பாடிப்பாடி மகிழ்வோம்
பாடிப்பாடி மகிழ்வோம்..!
எஸ். நித்தி, புங்குடுதீவு 9.