நடிகை ராஷ்மிகாவின் மயக்கும் அழகின் ரகசியம் | தினகரன் வாரமஞ்சரி

நடிகை ராஷ்மிகாவின் மயக்கும் அழகின் ரகசியம்

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன் பின் இவரின் மார்க்கெட் கூடியது.  

இதை தொடர்ந்து தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, பிஷ்மா ஆகிய படங்களில் நடித்து வந்தவர் தற்போது தமிழில் சுல்தான் படம் மூலம் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக, ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

அவரின் அழகும், சிரிப்பும் ரசிகர்கள், ரசிகைகள் மிகவும் கவர்ந்தது. இப்படியாக இருக்க அவர் தினமும் என்ன செய்கிறார் தெரியுமா? 

காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர், ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பது  சிற்றுண்டியாக கிண்ணம் நிறைய பலவித பழங்கள் சாப்பிடுவது. மதியம் அவித்த காய்கறிகள்..   சாதம் அல்லாத இரவு சாப்பாடு.. எளிதில் ஜீரணமாக்கூடிய உணவு வேகவைத்த முட்டை சேர்த்துக்கொள்வது..ஐஸ்கிரீம், சாக்லேட்டை தவிர்த்தல்.. 

ஆரோக்கியமான உணவுடன் நேர்மறை எண்ணங்கள், அமைதி, சந்தோஷம் இருந்தாலே அழகாக தெரிவோம்..இதுவே அழகு மற்றும் ஆரோக்கியத்தின் ரகசியங்கள் என அவர் கூறியுள்ளார்.    

Comments