![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/03/21/a27.jpg?itok=5NB7_hlw)
ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், மகேஷ் பாபு - மாளவிகா மோகனன் புகைப்படத்தை வைத்து யாரெல்லாம் இந்த காம்பினேஷனை பார்க்க ஆசைப்படுறீங்க என்று கேட்க, அதற்கு முதல் ஆளாக மாளவிகா மோகனன் நான் என்று பதிலளித்து இருக்கிறார். மாளவிகா மோகனின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு கொடுத்து வருகிறது.