அமெரிக்காவின் பிடிக்குள் நகர்கிறதா கியூபா? | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவின் பிடிக்குள் நகர்கிறதா கியூபா?

அமெரிக்க கண்டத்தில் அதிக முக்கியத்துவம் கொண்ட நாடாக நீண்ட காலமாக பேசப்படும் கியூபா விளங்குகிறது. 1959 முதல் தற்காலம் வரை அதன் தனித்துவம் தவிர்க்க முடியாத ஒரு தேசமாக காணப்படுகிறது. உலகத்தில் அமெரிக்கா எவ்வளவுக்கு முதன்மையானது என்பதை காட்டியதோ அதே அளவுக்கு கியூபாவும் முக்கியத்துவம் பெற்றது. அத்தகைய கியூபா பிடல் காஸ்ரோவின் தலைமையில் மிக நீண்ட காலமாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது. அவரை அடுத்து ராகுல் காஸ்ரோ பிடல் காஸ்ரோவின் வாரிசாக 2021 வரை அதிகாரத்தில் அமர்ந்திருந்தார். புதிய தலைமையிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்ட பின்பு அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான பின்புலங்களை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

11.07.2021 அன்று பொருளாதார சரிவு கொரனோ நெருக்கடியை தவறாக கையாண்டதன் காரணமாக கியூப கம்யூஸக்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக போராட்டக்கார்கள் தெரிவித்துவருகின்றனர். பெரியளவான மக்கள் திரண்டு போராட்டம் நிகழ்த்தியதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. அதே நேரம் போராட்டக்காரர்கள் சர்வாதிகாரம் ஒழியட்டும் விடுதலை வேண்டும் போன்ற முழக்கங்களை எழுப்பியதாகவும் எங்களுக்கு பயம் ஏதுமில்லை எங்களுக்கு மாற்றம்' வேண்டும் சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கியூபர்களது போராட்டத்திற்கு அமெரிக்காவே காரணம் என கியூப ஜனாதிபதி தியாஸ் காணல் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே இவற்றுக்கான அடிப்படை என்றும் அத்தகைய போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி கியூப அரசாங்கத்திற்கு புரட்சியாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளாh

எத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்த போதும் போராட்டக்'காரரது நடவடிக்கை தொடர்வதாகவும் நிகழ்ந்த பாரிய போராட்டம் அரசுக்கு ஆபத்தான அரசியல் நெருக்கடியை தந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மறுபக்கத்தில் இத்தகைய போராட்டத்தை அமெரிக்கா  தூண்டுவதன் மூலம் அடையப் போகும் இலாபங்கள் எவை என்பதே பிரதான கேள்வியாகும். அதனை விரிவாக நோக்குவோம்

முதலாவது அமெரிக்காவின் நீண்ட கால இலக்காக கியூபா காணப்பட்டது. ஆனால் காஸ்ரோவின் சந்ததி முடிவடையும் வரை அத்தகைய இலக்கினை அமெரிக்காவினால் தொட முடியாதிருந்தது. அதனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய சந்ததியின் இருப்பினை தகர்க்க முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டே அமெரிக்காவின் நகர்வு நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் அமெரிக்காவுக்கே சவாலாக திகழ்ந்த சிறிய தேசத்தை சிதைப்பதற்கான நகர்வையே அமெரிக்க முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கியூபா இருக்க வேண்டும் அல்லது அதனை பலவீனமான தேசமாக்க வேண்டும் என்பதே இலக்காகும்.

இரண்டாவது, கியூபாவின் சோசலிஸ முகம் நீண்ட நிலையானதாக அமைந்திருப்பது எப்போதும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் இருப்புக்கும் நெருக்கடியானதே. தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்திக் கொண்டு அத்தகைய சோசலிஸத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என அமெரிக்கா கருதுகிறது. சோவியத் யூனியன் தகர்ந்தது போலவோ அல்லது சீனா மாறிக் கொண்டது போலவோ கியூபா இல்லை என்பது அமெரிக்காவுக்குள்ள நெருக்கடியாகும்.
அது மட்டுமன்றி உணவிலும் மருத்துவத்திலும் கல்வியிலும் வலுவான தேசமாக கட்டமைக்கப்பட்ட கியூபா தகர்க்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட கால எண்ணமாகும். அத்தகைய எண்ணத்தை அடைதல் இலகுவானதாக தற்போதைய சூழல் அமைந்'துள்ளது அமெரிக்காவிற்கு வாய்ப்பானதாகும். பாரிய நெருக்கடியின் போதெல்லாம் அமெரிக்காவின் உதவியின்றி ஆட்சியையும் மக்கள் நலன்களையும் நிறைவு செய்த கியூபாவினால் தற்போதுள்ள நிலையை  எதிர்கொள்ள முடியாதிருப்பது என்பது திட்டமிட்ட நகர்வாகவே தெரிகிறது. அதிலும் அமெரிக்காவின் உபாயங்கள் அதிகமாகவே கியூபாவை கையாண்டுள்ளதாக தெரிகிறது.

மூன்றாவது அமெரிக்காவின் உலகளாவிய பலம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக ஆசியா முழுவதும் சீனா மற்றும் ர
ரஷ்யாவின் நகர்வுகளால் அமெரிக்க கொள்கைகள் பலவீனமடைந்து செல்கிறன. அதனால் அத்தகைய நெருக்கடியை தவிர்க்கவும் அமெரிக்க இராணுவத்திற்கும் கொள்கை வகுப்பாளருக்கும் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டுள்ள மனநெருக்கடியை கியூபா மூலம் தணிக்கவும் புத்தெழுச்சி ஏற்படுத்தவும் அமெரிக்க ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதனால் கியூபா மீதான நெருக்கடி இலகுவான அமெரிக்கர்களுக்கான மீழெழுச்சியை  சாத்தியமாக்க வாய்ப்புள்ளது. அதனால் இத்தகைய விடயத்தை பயன்படுத்தவும் சர்வதேச மட்டத்தில் முதன்மைப்படுத்தவும் அதிகமான கரிசனையை அமெரிக்கா கொண்டுள்ளது.

நான்காவது பிராந்திய ரீதியில் அமெரிக்காவுக்கு ஒரு எழுச்சிகரமான முகம் தேவைப்படுகிறது. அதாவது உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் வலு குன்றும் போது பிராந்தியத்தில் தனது வலிமையை பலமானதாக வைத்துக் கொள்ள திட்டமிடுகிறது. அது அமெரிக்காவின் எழுச்சியை சாத்தியப்படுத்துவதுடன் தனது பிராந்தியத்திலாவது சீனா ரஷ்யாவினது ஆதிக்கத்தை தடுக்க முடியும் எனக் கருதுகிறது. அதனாலேயே மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் அதிகாரத்தை பிராந்திய அடிப்படையில் தக்க வைக்க முடியும்' என அமெரிக்கா கருதுகிறது.

சீனாவினதும் ரஷ்யாவினதும் ஆதிக்கம் உலகளாவிய ரீதியில் வலுவடையும் போது அந்த நாடுகளது நட்பு சக்தியான கியூபா மீது நெருக்கடியை ஏற்படுத்துவது அமெரிக்காவின் உலகளாவிய நலன்களுக்கு இலாபகரமானதாக அமைய வாய்ப்புள்ளது. அதனால் சோசலிஸ முகங்களை தகர்ப்பதற்கும் அதன் நட்புக்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்கும் அமெரிக்காவுக்கு சிறந்த வாய்ப்பாகவும் தெரிவாகவும் அமைந்துள்ளது. அதனால் நேரடியாக கியூபாவையும் மறைமுகமாக ரஷ்யா சீனாவையும் அமெரிக்க கையாள முனைகின்றதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆறாவது சீனா ஹெங்கொங் மீதும் தைவான் மீதும் பிடியை இறுக்கும் போது மாற்று வழிமுறையாக கியூபாவை அமெரிக்கா தெரிவு செய்துள்ளது. இதன் மூலம்' கியூபாவை விட சீனாவையே அமெரிக்கா இலக்காக கருதுகிறது. அதற்கான தயாரிப்புகளையும் நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம் இரு தரப்புக்குமான அரசியல் அல்லது அதிகார  சமநிலையை சாத்தியப்படுத்த முடியுமென அமெரிக்கா கருதுகிறது.

ஏழாவது கியூபா மீதான நெருக்சகடி தனித்து உள்நாட்டு ரீதியில் நகழும் அரசியலாக அன்றி பிராந்திய சர்வதேச அரசியலாகவே புரிந்து கொள்'ளப்பட வேண்டும்.இது கியூபாவை தராள பொருளாதார பெறிமுறைக்குள் வேகமாக நகர்த்தும்அல்லது சர்வாதிகார அணுகுமுறைக்குள் தள்ளும். எதாவது  ஒன்றின் கீழ் கியூபா செல்வது நீண்டகால நோக்கில் அமெரிக்காவுக்கு இலாபகரமானதாகவே அமையும்.

அத்தகைய இலக்கினை நோக்கியே அமெரிக்கா நகர்கிறது. மக்களை தூண்டுவதன் மூலம் அமெரிக்க ஆட்சியாளார்களுக்கு நெருக்கடியை கொடுக்க அமெரிக்கா எத்தனிக்கிறது.

எனவே அமெரிக்காவின் இலக்கு பிராந்தியத்தைக் கடந்து உலகளாவிய அரசியலாக அமைந்துள்ளது. அதன் மூலம் கியூபாவை புதிய சூழலுக்கு கொண்டு செல்ல முயலுகிறது.

ஆனால் கியூப ஆட்சியாளர்களோ இலகுவில் மாறுதலை அடைவதென்பதை தெரிவாக கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments