![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/08/22/a18.jpg?itok=HsOhBL2f)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகைகளாக வரும் நயன்தாரா மற்றும் அனுஷ்கா இருவருமே தங்களுடைய கேரியரில் உச்சத்தை தொட்ட நடிகைகள். ஆனால் அனுஷ்காவுக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி வெற்றிப் படங்கள் இல்லை.
அதற்கு மாறாக நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறைந்தது நயன்தாரா நடிப்பில் வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதில் கமர்சியல் படங்கள், சோலோ ஹீரோயின் என அனைத்துவிதமான படங்களிலும் நடித்து வயதானாலும் ரசிகர்களை தன்பக்கம் வசியப்படுத்தி வைத்துள்ளார் நயன்தாரா. அப்படி சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் நெற்றிக்கண் என்ற படம் வெளியானது.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் மூக்குத்தி அம்மன் போல் ஆஹா, ஓஹோ என படம் கொண்டாடப்படவில்லை என்பது நயன்தாராவுக்கே கொஞ்சம் வருத்தம்தான். இதனால் அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்க தீவிரமாக உள்ளார் நயன்தாரா.
இந்த நேரத்தில்தான் அனுஷ்காவுக்கு நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்யலாம் என்ற ஆசை வந்துள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனுஷ்காவை எச்சரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கொரியன் சினிமாவில் இருந்து ரீமேக் செய்து தான் நெற்றிக்கண் என்ற படத்தை எடுத்தனர். அந்தப் படத்தையே தெலுங்கில் எடுக்க வேண்டாம், ஒருவேளை அந்த படத்தை முடிவு செய்தால் அதுவே உங்களுக்கு சினிமாவில் கடைசி படமாக அமைந்து விடும் எனவும் அனுஷ்காவை பயமுறுத்தி வருகிறார்கள் நம் ரசிகர்கள். உண்மையாவே நெற்றிக்கண் சுமார்தானா?