வெகுவிரைவில், சிலசமயம், இந்த (2021)குளிர்காலமுடிவில், சோவியத்யூனியன்நாடுகளில்பலம்பொருந்திய வற்றில் ஒன்றாய் இருந்த, உக்ரைன் மீது ரஷ்யாவால் நேரடி இராணுவத் தாக்குதல் நடாத்தப்படக் கூடும் என்கின்றஅச்சம் பல நாடுகள் மத்தியில் குறிப்பாக ஐரோப்பிய,ஆசிய பிராந்தியத்தில்எற்பட்டுள்ளது.
இதற்கானஅறிகுறிகள் தாராளமாகவேதென்படுகின்றனஎன்று தெரிவிக்கும் சர்வதேசஅரசியல்ஆய்வாளர்கள், அதிகரித்து வரும் உக்ரைன் அரசு மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை, பொறுக்க முடியாத மொஸ்கோ உக்ரேனிய எல்லையில் தனது படைகளை அமைதியாகக் குவித்து வருவதை ஆதாரமாக சுட்டிக் காட்டு கின்றனர்.
மதம், பண்பாடு, பழக்கவழக்கம், கலை கலாசாரம், என்பவற்றால் ஒன்றுபட்ட பூர்வீக தொடர்புகளை நிறையவே கொண்ட அருகருகே இருக்கும்,முன்னர் ஒன்றியமாக இருந்த இரண்டு நாடுகளிடையே போர் மூழுவதற்க்கான சூழல் தோன்றியுள்ளதென்றல் அதற்கு காரணம் அமெரிக்காவின் ஏகாதிபத்திய சிந்தனா வெளிப்பாட்டின் காய் நகர்த்தல்களே என்பதை எவரும் மறுக்க முடியாது.
சோவித் யூனியனின் உடைவுக்கு காரணமான அமெரிக்கா அந்த நாடுகள் தனித் தனியாக பிரிக்கப்பட்ட பின்னர், தனது எல்லையில் இருக்கும் உக்ரேனிய அரசினுள் ஊடுருவி தனக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்வதனை தொடர்ந்தும் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலேயே ரஷ்யா இந்தஇராணுவ நடவடிக்கைக்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளது.
முன்னரைப் போல போருக்கு எதிரான ரஷ்ய மக்கள் எழுச்சியும், அதனை அடுத்து மீண்டும் ஒரு கட்டாய இராஜதந்திரத்தில் ஈடுபட்டு உக்ரைனுடனான போரைதவிர்க்க முனையும் சூழலும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு தற்போது இல்லாத நிலையில், நிச்சயம் இம்முறை போர் மூழும் நிலைமையே காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் இப்போது உடன்பாடு எட்டப் படாவிட்டால், மோதல் தவிர்க்க முடியாததாகி மிகப் பெரிய போராக உருமாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் படுகிறது..
உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா குடாநாட்டினை ரஷ்யா தனதாக்கிக் கொண்டதுடன் ஆரம்பித்த இருநாடுகளிக்கும் இடையிலான விரிசல், இந்த சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உக்ரயினுள் ஊடுருவிய அமெரிக்க,மற்றும் ஐரோப்பாவின் அமெரிக்க ஆதரவு நாடுகள், ரஷ்யா மீது விதித்த பொருளாதார தடைகளை அடுத்து மேலும் அதிகரித்தது.2014ம் ஆண்டு இடம் பெற்ற இந்த கிரிமிய மீளிணைப்பை,ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு என முன்னிறுத்தி கொண்டு,சர்வதேச ஆக்கிரமிப்பின் பிதாமக்களான, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதற்க்கு சாமரம் வீசும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் அரசை தம்வசப்படுத்திக் கொண்டுள்ளன. இந்த சக்திகள் அந்த நாட்டில் உள்ள வளங்களை சுரண்டி வருவதுடன் அங்கிருந்து கொண்டு தம்மை வேவு பார்ப்பதுடன் தமக்கு எதிரான காய் நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படும் ரஷ்ய தரப்பின் குற்றச் சாட்டுக்கள் யதார்த்தமானவையே.
60வீதமான ரஷ்ய பூர்வீக மக்களை கொண்ட கிரிமிய தீபகற்பகம் ,முன்னைய சோவியத் ஒன்றிய காலப் பகுதியில் ரஷ்ய நிலப்பரப்புடன் இணைந்த, ரஷ்யாவின் ஒரு மாநிலமாக இருந்தது என்பதும் அன்றைய ஒன்றிய அரசின் நிர்வாக வசதிக்காக உக்ரைனுடன் இணைக்கப் பட்டது என்பதுவும் வரலாறு.
மேலும் உக்ரைன் நாட்டின் கிழக்கே, ரஷ்ய எல்லைப்பகுதியில் இருக்கும் 80வீத ரஷ்ய பூர்வீக மக்கள் தொகையை கொண்ட இரண்டு மாநிலங்கள் தனிநாட்டு பிரகடனம் செய்து உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருவதும், இதன் பின்னணியில் ரஷ்யாவே இருப்பதாகவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் உட்பட்ட உதவிகள் அனைத்தும் மொஸ்கோவில் இருந்தே கிடைப்பதாகவும் உக்ரைன் குற்றம் சுமத்தி வருகிறது.
இப்படியான பின்னணியில் ஆரம்பிக்கப் பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை சிறுக சிறுக வளர்ச்சி அடைந்து தற்போது நேரடி மோதல் கட்டத்தை எட்டியுள்ளது.புட்டினுடன் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கடந்த வாரம் அறிவித்துள்ள உக்ரைன் அரசு, கடந்த ஆண்டு ரஷ்யா முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பில் தாம் வலுவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் ஆனால் ரஷ்ய தரப்பில் இருந்து இதற்கு சாதகமான சமிக்ைஞகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அறிவித்துள்ளது.
மேலும் கடந்த வாரம் சுவீடன் தலைநகர் ஸ்ரோக்கோமில் அமெரிக்க வெளியுறவு செலாளர் பிளிங்கன்,ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லவ்ரோ இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க வெளியுறவு செயலர்.
ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரைனின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் அதேவேளை, உக்ரைன் அரசும், ரஷ்யாவினதும் ஐரோப்பிய போட்டியாளர்களினதும் , அமெரிக்காவினதும் ஆதரவை பெற்று தனது படைப் பலத்தை வலுப் படுத்தி வருகிறது.
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலம் பெற்று, ஐரோப்பாவின் முக்கிய எரிவாயு,பெற்ரோல் ஏற்றுமதி நாடாக வளர்ந்து வரும் ரஷ்யா, வாஷிங்டனின் கவனத்தை ஈர்ந்து வருவதுடன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சீனாவுடனான அதன் போட்டிக்கு சாதகமாக ரஷ்யாவை மாற்ற முயற்சிகிறது எனவும் சில சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளுடனான உக்ரைனின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை சகிக்க முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர் சில ரஷ்யத் தலைவர்கள்,
அதே வேளை உக்ரைன் மீதான படையெடுப்பு உடனடியானது அல்ல என்றும்,இராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்கான அரசியல் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் ரஷ்யாவின் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக உக்ரைனின் எல்லையை ஒட்டிய பகுதிகளை மையப்படுதியே முன்னெடுக்கப் படுவதும் ரஷ்யாவின் முக்கிய இராணுவத் தளமான காகசஸில் இருந்து பல படைபிரிவுகள் கிரிமியாவிற்கு அனுப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.2018ஆம் ஆண்டு ரஷ்யாவுடனானா பேச்சுவார்த்தைக்கு தமது அரசு தயாராக உள்ளதாக அறிவித்த உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த வருடம் ரஷ்யாவுடன் சமரசம் செய்வதிலிருந்து விலகிச் சென்றதானது, இராஜதந்திர ஈடுபாட்டின் மூலம் பிணக்குகளை தீர்க்கலாம் என்கின்ற ரஷ்யாவின் நம்பிக்கையை உடைத்தது.
அதே நேரத்தில், உக்ரைன் அரசு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நேட்டோ நாடுகளுடனான தனது கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்துவதுடன் நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்ள முனைகிறது.
அமெரிக்கா ஆபத்தான இராணுவ பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்க நேட்டோ நாடுகள் உக்ரேனிய இராணுவத்திற்கு நேரடியாகவே பயிற்சி அளித்து உதவுகிறது. வளர்ந்து வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் இந்த உறவுகள் மொஸ்கோவை மேலும் மேலும் சீற்றமடைய வைத்து இன்று போர் நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.
அமெரிக்கா உக்ரேனிய பிரதேசத்தை ஆளுமைப்படுத்தி ரஷ்யாவிற்கு எதிரான ஒரு கருவியாக பயன்படுத்த தயாராகிறது என்கின்ற கிரெம்ளினின் பார்வை யதார்த்தமானதே. இதனை எதிர்கொள்ளும் வகையில் ரஷ்ய இராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதுடன் அதன் திறனைத் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும்.
உக்ரைன் அரசு அமெரிக்காவின் ஆளுமைக்குள் முற்றிலுமாக கொண்டு வரப்பட்டால் தனது அதி திறன் மிக்க அணு ஆயுத்தங்களை அங்கே நிலை நிறுத்தி அந்த பிராந்தியத்துக்கே அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தும் ஓர் நிலைமை ஏற்படவும் வைய்ப்பக்கள் உண்டு.
காலம் காலமாக இருந்து வரும் ஏகாதிபத்தியங்களின் இந்த ஆக்கிரமிப்பு மனோபாவமே இராஜதந்திர நகர்வுகள் என்கிற நிலைமையை தாண்டி படைப் பலத்தால் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையிலான பிணக்குகள் தீர்க்கப் படவேண்டும் என்கிற நிலமையை ரஷ்யாவிற்கு ஏற்படுத்தி உள்ளது,
2014இல் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் மீறி நாட்டின் நிதி நிலையை மீண்டும் சீராக கட்டியெழுப்பிய மொஸ்கோ தற்போது சுமார் 620பில்லியன் பவுன்சுகள் வெளிநாட்டு நாணய இருப்புகளைக் கொண்டுள்ளதாக நாட்டின் பொருளாதார அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.., உலக சமாதானத்துக்கான ஒரு அச்சுறுத்தல் என்பதும் மறுக்க முடியாதது.
உக்ரைனுடனான மோதல் விடயத்தில் தமது படை பலத்தை பயன்படுத்துவது எளிதானதாகவோ அல்லது செலவில்லாததாகவோ இருக்கும் என்று பல ரஷ்யத் தலைவர்கள் நம்பாவிட்டலும் உக்ரைன் ஏற்றுக் கொள்ள முடியாத பாதையில் செல்வதையும்.உக்ரைன் மீதான அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரற்றவர்களாகவே இருக்கின்றனர். அதே வேளை இரண்டு பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்து வருவது
அருகருகே இருக்கும் முன்னாள் ஒன்றிய நாடுகளிடையேயான இந்த மோதல் நிலையானது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு ஐரோப்ப்பிய நாடுகளின் தம் நலம் சார் பொருளாதார காய் நகர்த்தல்களால் புதுப்பிக்கப் பட்டு இன்று ஒரு போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. .
இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஒன்று மூளுமானால் ஐரோப்பாவின் வரைபடமே மாற்றம் அடையும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் போரியல் ஆய்வாளர்கள்.
கோவை நந்தன்