நம்மைச் சுற்றியுள்ள உலகம் அழகுமயமானது. அதேவேளை இயற்கையின் கொடைகள் அழகாக மட்டும் இருப்பதில்லை. அவை மிகப் பயனுள்ளவையாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும். வானவில்லைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
வானவில்லில் சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா ஆகிய ஏழு வர்ணங்கள் அலங்கரிக்கின்றன.
ஒவ்வொரு வர்ணமும் ஒரு விடயத்தை வெளிக்காட்டக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கின்றது. வர்ணங்கள் பெரும்பாலும் எங்களுடைய பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவக்கூடிய வகையில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக வாகன போக்குவரத்து சமிக்ைஞ விளக்குகள் சிவப்பு விளக்கு எரிந்தால் நிறுத்துங்கள், பச்சை எரிந்தால் செல்லுங்கள், மஞ்சள் எரிந்தால் அவதானமாக இருங்கள். சிவப்பு இரத்தத்தின் நிறமாக இருப்பதனால், அது ஆபத்துக்கான சமிக்ைஞயாக ஆண்டாண்டு காலமாகப் பயன்படுகிறது.
நன்மையான அல்லது நம்பிக்கையூட்டும் நிறமாக பச்சை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆரம்பிப்பது அல்லது தொடங்குவதற்கும் நம்பிக்கையூட்ட முடியும் என்பதால் பச்சை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வர்ணங்களின் வரலாற்றையும் அதன் ஜாலங்களையும் நாம் அறிந்துகொள்வது அவசியமாகும்.
ஏ.எச்.அப்துல் அலீம்
தரம் - 07சி,
அலிகார் தேசிய கல்லூரி,
ஏறாவூர்