சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு; சாங்சுன் நகரில் புதிய வைரஸ் பரவல் | தினகரன் வாரமஞ்சரி

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு; சாங்சுன் நகரில் புதிய வைரஸ் பரவல்

சீனாவின் சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய வைரஸ் பரவலே காரணமென    ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  

உலகம் முழுவதும் தற்போது 45.50கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நிலைமை இவ்வாறிருக்க, சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அது மிகப் பெரிய பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதி உள்ளது. இந்த நகரில் சுமார் 90இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் தான் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது. 

இதையடுத்து, இந்த சாங்சன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, எப்போதிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.

Comments