நான்காவது தடுப்பூசியை விரைவில் செலுத்துங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நான்காவது தடுப்பூசியை விரைவில் செலுத்துங்கள்

நான்காவது கொவிட் 19தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொள்ளுமாறு பொது மக்களை சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. 

நான்காவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லையெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

நாட்டில் இது வரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே நான்காவது தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளதாகவும் மூன்றாவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

நாளாந்தம் 100 கொவிட்19 தொற்றாளர் அடையாளம் காணப்படுவதோடு, மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாவிட்டால் இந்நிலைமை மோசமடையுமென தெரிவித்துள்ளார்.

Comments