வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 36,219,000ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்றுக் (27) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர், சுமார் 10வருடங்கள் பிரான்ஸில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பியவர் எனவும் கிறீன் செனல் வழியாக வெ ளியேற இவர் முற்பட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுந்தே நபர் 2414.6 கிராம் தங்க நகைகளை தனது பயணப் பையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய மாலபே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.