போராட்ட களத்தை வழிநடத்திய சகலரையும் கைது செய்ய வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

போராட்ட களத்தை வழிநடத்திய சகலரையும் கைது செய்ய வேண்டும்

போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.  

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இந்நாட்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மறுசீரமைப்பு கூட்டங்களில் கலந்துகொள்வதுடன், வெலிமடை நுகதலாவையில் நேற்று நடைபெற்ற செயற்றிட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.  

நிகழ்வை பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.  

இதன்போது பேசிய அவரிடம், போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.   அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்‌ஷ, அவ்வாறானதொரு யோசனை அரசாங்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை. போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்களென்பதை நாம் உணர வேண்டும். அவர்களை சிறையிலடைத்து, தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும். எனது மனைவியின் வீட்டுக்கும் தீ வைத்தனர். எனது வீட்டுக்கும் தீ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுத்து வைப்பதும் பயனற்றது. வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களை ஏதேனுமொரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூயமயப்படுத்த வேண்டுமென்றார்.    

Comments