word | தினகரன் வாரமஞ்சரி

word

ராமண்ணே

 

“வல்லிபுரமண்ணே. உள்ள இருக்கியளோ. வந்து அஞ்சு நிமிஷம் ஆயிட்டுது ஆளக் காணேல்ல. முற்றத்தில காலவச்சவுடனவாவா இப்பயோவாறனீ எண்டு கேட்பியள். இன்டைக்கு ஒன்டும் பேச்சைக் காணல்ல..”

“யார் சின்னராசாவோ.. வாவா. வல்லிபுரமண்ணடவுனுக்குபோட்டார். வாரத்துக்கு கொஞ்சம் சுணங்கும். ஏன் என்னவும் அவசரமோ.”

“இல்லசெல்லாச்சி. டவுனுக்குபோறவரென்டு சொல்லியிருந்தா நானும் வந்திருப்பனென்ன?”

“பின்னேரத்திலகடையல் மூடிப்போடுவினம் எண்டுதான் காலமையேபோனவர்”;

“பின்னேரத்திலகடையள் அடப்போ?? ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போயினமோ?”

“ஆர்ப்பாட்டம் ஏதும் இல்ல சின்னராசு. தமிழ் நாட்டு முதல்வருக்கு அஞ்சலி செலுத்தறதுக்கு யாழ்ப்பாணத்தில கடையல 2 மணிக்கு மூடச் சொல்லியிருக்கினம்.”

“அஞ்சலி செலுத்தத்தான் வேணும்”

பின்ன இலங்கை விஷயங்கள எத்தின தடவை தமிழ் நாட்டு சட்டசபையில் பேசினவ. ஆண்களின்ட ஆதிக்கம் நிறைஞ்ச தமிழ்நாட்டில ஒரு பெண்ணால என்னசெய்ய முடியும் எண்டு காட்டினவளல்லோ. உந்ததைரியம் யாருக்குவரும். அவவுக்கும் சகோதரங்கள் இருக்கினம். மருமக்கள் இருக்கினம். ஆனா அவையளின்ட சுகதுக்கத்தைபாக்காம ‘எனக்காக மக்கள், மக்களுக்காக நான்’ எண்டு சொல்லிப்போட்டு தமிழ் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவ. ஒருவருஷம் ரெண்டுவருஷமில்ல 26, 27 வருஷம். எவரும் செய்வினமே”.

“மெய்தான் செல்லாச்சி அக்கா.”

“பின்னபொய்யோ சொல்றனான்.. 2 மாசத்துக்கு முன்னால சட்டசபையில நல்லா பேசிக்கொண்டல்லோ இருந்தவ. நோயாளிதான் மூட்டுவலி, சீனிவருத்தம், இருந்திருக்கு. என்னப் போலத்தான். உந்தரெண்டு வருத்தமும் எனக்கும் கிடக்குதுகண்டியோ.”

“உங்களுக்கோ?”

“ஏன் உனக்குத் தெரியாதே?”

“மருந்தெடுக்கப் போறியள் எண்டுதெரியும். ஆனா சீனிவருத்தம், மூட்டுவலி இருக்கென்டு தெரியாது.”

“ஊருக் கெல்லாம் தெரியும். உனக்குத்தான் தெரியாது அதில்ல சின்னராசா சாதாரண காச்சல் எண்டுதான் ஆஸ்பத்திரியில சேத்திருக்கினம். ரெண்டுநாள்ல எல்லாம் சரியாகிப்போடும் எண்டுதான் சொன்னவையாம். ஆனா ஓவ்வொரு நாளும் அந்தநோய் இந்தநோய் எண்டுசொன்னவை. திடீரென்டு லண்டனில இருந்து ஸ்பெஷலிஸ்ட் வைத்தியர் வந்தவர் எண்டுசொல்லப்போகத்தான் ஏதோ வில்லங்கம் எண்டு தெரிஞ்சிது. செப்டம்பர் 22ஆம் தேதிகாலையில முதலமைச்சருக்கும் சசிகலாவுக்கும் சண்டை நடந்ததென்டு சொல்லினம். சண்டையில முதல்வர் கீழே விழுந்துகாயப்பட்டுப்போனாவாம். உதால தான் ஹொஸ்பிடல்ல சேர்த்தவையாம்.”

“மெய்யா?”

“பின்ன அவசர அவசரமாகையடையாளத்தை பதிப்பிச்சி ஏதேதோ செஞ்சவையாம். எதை எதையெல்லாம் எழுதி எடுப்பிச்சிக் கொண்டவையோயாருக்குத் தெரியும். உண்மையில என்ன நடந்ததென்டுதெரியேல்ல. எது நடந்தாலும் பாவமென்ன. எவ்வளவு பணமிருந்தும் பேரிருந்தும் பிறத்தியாளின்ட கையாலதானே சாப்பிடவேண்டிக் கிடந்தது. மகள் இருந்தும் மகளின்ட கையால ஒருவாய் சாப்பிடகிடைக்கேல்லியே.”

“மகள் இருக்கோ?”

“இல்லாமலென்ன. தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுக்கும் உவவுக்கும் பிறந்தவள் ஊட்டியில படிச்சவள். சாந்தி எண்டுபேர். இப்ப அமெரிக்காவில இருக்கிறாவாம். உதோட அண்ணனின்ட மகள் தீபா இருந்தவை. இவையின்ட கையாலசாப்பிடகொடுத்துவைக்கேல்ல. பிறத்தியாரோட இருந்தாகாலவாறத்தான் பார்ப்பினம். எங்கட ஊரிலநடக்கிற சொத்து சண்டைதான் அங்கயும் நடக்கும். எங்கட ஆக்கள் காரியம் முடியிறவரை வாலைச் சுருட்டிக்கொண்டிருப்பினம். முடிஞ்சவுடன ஆரம்பிச்சிப்போடுவினம்”.

“ஓமக்கா. சரியாச் சொன்னியள்”

“அம்மாவின்ட விஷயத்தால கச்சதீவுதேவாலய கொடியேத்தத்தையும் நிறுத்திப்போட்டினம். சென்னையில கிரிக்கெட், திரைப்படவிழா எல்லாம் நின்டுபோட்டுது. ஆனா எங்கட சினிமாக் கவிஞன் அஷ்மின் முதல் ஆளா இரங்கற்பா எழுதிப்போட்டான் வர்ஷன் பாடிப்போட்டான் நீகேட்டனியோ ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்டபாட்டு. உந்தபாட்டை இளையராஜாதான் எழுதிப் பாடினவர் என்டுநிறையப் பேர் குழம்பிப் போட்டினம். பின்னால தான் விஷயத்தை தெரிஞ்சிகொண்டினமாம்”

“இல்ல. ஆனாகேட்கோனும”;

“அதில்ல சின்னராசு அம்மாவின்ட சொத்து 118கோடிக்கு மேல இருக்குமென்டு பேசுகினம். அவ்வளவு இருக்குமோ”.

“ஏன் இல்லாம.. எவ்வளவு காலம் பதவியில இருந்தவ”

“அப்ப இருக்குமென்ன. ஏலெட்டுகார் பங்களா தங்கநகை தோட்டம் துறவு எண்டு அதுக்குமேலயே இருக்குமென்டு நினைக்கிறன்.அது இனியாருக்கு போகும். நீ என்னநினைக்கிறனீ”

“யாருக்கோ.. பிள்ளையளுக்குத் தான் போகும்”;

“பிள்ளையள் என்டா அண்ணனின்ட பிள்ளையளுக்கே. முன்னால உயில் ஏதும் எழுதிவெச்சாவோ”.

“தெரியேல்ல செல்லக்கா”.

“அம்மாவின்ட திட்டத்தில தொட்டில் குழந்தையள் திட்டத்தையும் உணவகம் திட்டத்தையும் மறக்கேலாது சின்னராசு. இரண்டும் சாதாரண ஆக்களுக்கென்டு செஞ்சவை. எம்.ஜீ .ஆரின்ட சத்துணவு திட்டமும் உதைப்போல ஒன்டுதான்.”

“நல்ல திட்டங்களென்ன”

“பின்ன உந்ததிட்டத்தால உயிர் பிழைச்ச பெண் குழந்தையள் நூற்றுக்கணக்கில இருப்பினம். 1980, 90 காலத்தில பொம்பளப் புள்ளையள் பிறந்தவுடன கள்ளிப்பால் கொடுத்து இல்லயென்டா அரளிவிதைய அரைச்சிக் கொடுத்து கொன்டுபோடுவினமாம். உந்த பழக்கத்தைமாத்தத்தான் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை அம்மா 1992 ல கொண்டு வந்தவ. உந்த திட்டத்தை இப்பசரியா நடைமுறைப்படுத்திறதில்லயென்டு குறைசொல்லினம். தமிழ்நாடு அரசு தான் உதைச் செய்யவேணும். எங்கட இனத்துக்கே பெருமை சேர்க்கிற விஷயமென்ன. அன்னைதெரேசாவும் உந்த திட்டத்தை ரொம்பபாராட்டிப் பேசியிருந்தவ”

“பசிக்கு சாப்பாடுபோடுற உணவுத் திட்டமும் பெரிசென்ன”

“இங்கபார் சின்னராசு பசிச்சவருக்கு சாப்பாடுகுடுக்குறது தமிழரின்ட மத்தொருகுணமப்பா. சும்மா தரவும் முடியா தென்டதால கொஞ்சம் காசு எடுக்கினம். தமிழ் நாட்டுக்கு நல்ல திட்டங்கள் மட்டுமில்ல, தமிழ் நாட்டின்ட உரிமைய மதிப்பைலே சிலவிட்டுக் கொடுக்காத இரும்பு மனுஷியென்ன. நடிப்பிலமட்டுமென்ன 127 படங்களிள நடிச்சவை அதில 87 படங்கள் வெள்ளிவிழாகொண்டாடியவையாம். 70 களில இந்தியாவில அதிக சம்பளம் வாங்கிய நடிகை அம்மாதான். 1968 ல மட்டும் 20 படம் நடிச்சி சாதனை படைச்சவ. ‘அம்மாஎன்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு’ என்ட அம்மாபடிச்ச பாட்டை நான் ஸ்கூல்லபாடிபெஸ்ட் பிரைஸ் அடிச்சனான். வேணுமென்டா ஐயாவகேட்டுப் பாறன். அவருக்குத் தெரியும்”.

“அப்பிடியே நான் கேட்குறனான்”

“ அம்மாவுக்கு பச்சைநிறம் தான் பிடிக்குமாம். அதால பச்சைபட்டுப்புடவை கட்டி தங்க செயின், தங்கவளையல், பச்சைஎமரால்ட் மோதிரம், கையில லட்சக்கணக்கான ரூபா பெறுமதியான வாட்ச் ஆகியவையோடத் தான் அடக்கம் பண்ணினவையாம். அரசமரியாதையோட தான் அடக்கம் நடந்திருக்குது”

“பிராமண ஆக்கள் என்டினம் தகனம் செய்யல்லியே”

“எம்.ஜி.ஆர்.சமாதி அருகிலேயே இருக்கவேணும் எண்டு விரும்பியதால அதுபோல செஞ்சினமாம். பதவியில இருந்தநேரம் மோசம் போன மூன்டாவது தமிழகமுதல்வர் அம்மாதானாம். மத்தவை அண்ணாவும் எம்.ஜி.ஆரும். அம்மாவின்ட இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சியில 77 பேர் உயிரிழந்திருக்கினம் எண்டுரேடியோவில சொன்னவ. உதிலரெண்டு காவல் துறை அதிகரரிகளும் இருக்கினம். அம்மாவின்ட அடக்கம் நடந்தநாளில தொடர்ந்து கடமையாற்றி களைப்படைஞ்சதால ஒருகாவல் அதிகாரிமோசம் போனவராம்.”

“காவல் வேலையென்டா உப்பிடித்தான்”

“உதில்ல தமிழ்நாட்டில சின்னராசு நீண்டகாலம் முதல்வரா 18 வருஷம் 10 மாசம் சரியாசொன்னா 6,868 நாள் பதவியில இருந்தது கருணாநிதிதானாம். அம்மா 5,242 நாள்தான் முதல்வரா இருந்திருக்கிறா. ஆனா உயிரோட இருந்திருந்தா.. முதல் இடத்தை பிடிச்சிருப்பா ஆனா அதுக்குள்ள விதி விளையாடிப்போட்டுது”

   
 
மெரினாவில் அமையும் அம்மா நினைவிடம்
 

 

Comments