![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/12/30/gettyimages-119505258.jpg?itok=Ha2Nlk8-)
உலகை அச்சுறுத்திய சர்வாதிகாரி, யூத இனமே அழிவதற்கு முக்கிய காரணமானவர். கொடூர குணம் கொண்டவர் என அறியப்பட்ட அடல்ப் ஹிட்லரின் மனதுக்குள் இருந்த ஈரமான இதயம் வெளி உலகிற்கு அவ்வளவாக தெரிந்திருக்காது.
வரலாற்றை நாம் திரும்பி பார்க்கிறோமோ இல்லையோ, வரலாறு நம்மை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் தான் ஹிட்லர். உலகில் ஜேர்மனியினரே உயர்ந்த இனத்தவர். உலக மக்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்பதற்காக நாசி கட்சியை ஆரம்பித்தார். இந்த நாசி கட்சியினர், யூத மக்களை கொன்று குவியலாக போட்டு வைத்த புகைப்படங்கள் இன்று வரை இணையங்களில் வெளியாகி ஹிட்லரின் கொடூர முகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன.
ஆனால், செயல்கள் புரிந்து வந்தாலும் இவரின் இரக்கமான மனதுக்குள் காதலும் இருந்தது. ஹிட்லரின் வாழ்வில் இது வரை பெண்கள் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே, ஹிட்லரின் அன்புக்காக ஏங்கியவர்கள்தான். இதில் முக்கிய இடத்தை பெறுபவர் “Eva Braun” இவர் தான் ஹிட்லரின் கடைசி காலத்தின் அவருடன் வாழ்ந்து அவருடனேயே உயிரிழந்தார்.
அவருக்கு 17 வயது இருக்கையில் ஹிட்லரின் புகைப்படக் கலைஞராக சேர்ந்தார். உலகமே அஞ்சிக் கொண்டிருந்த அந்த மனிதனை பார்த்து முதல் சந்திப்பிலேயே காதல் கொண்டார். ஹிட்லர் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பார். எதற்காக இப்பெண் என்னை பார்க்கிறார்? என ஒரு முறை ஹிட்லரே புகார் தெரிவித்துள்ளார். டொவின் காதல் பற்றி தான் அதிகமாக பேசப்பட்டதே தவிர ஹிட்லர் எவாலின் மீது காதல் கொண்டாரா என்பது புரியாத கேள்வி.
ஆனால், எவாவை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டார். ஹிட்லருக்காக 3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார் எவா. முதல் முறை ஹிட்லரின் கவனத்தை திருப்ப தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இரண்டாவது முறை அவர் தன்னை விட்டு வேறொரு பெண்ணுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற ஏக்கத்தினாலும் 35 தூக்க மாத்திரைகளை உட்கொள்ள இருந்தாராம். ஆனால் அன்று ஹிட்லர் அவரை பார்க்க மறுத்து விட்டதால் அது வெறும் முயற்சியாகவே முடிந்தது.
மூன்றாவது முறை ஹிட்லர் தற்கொலை செய்யப் போவதால், எவா இனி வாழ இயலாது என்று தற்கொலை செய்து கொண்டார். சையனைட் உட்கொண்டு இறந்து விட்டார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று இவர்களின் குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. மற்றவர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்தால் எவாவை தனியாக ஒரு அறைக்கு அனுப்பி விடுவாராம் ஹிட்லர்.