தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான கிருஷ்ணா, அடுத்ததாக மலையாள சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கிருஷ்ணா. இவர் கடைசியாக தனுஷ் உடன் இணைந்து 'மாரி 2' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக 'கழுகு 2' படம் ரிலீசாக இருக்கிறது. இதில் கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவியும், முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட்டும் நடித்துள்ளனர். இந்த நிலையில், கிருஷ்ணா அடுத்ததாக மலையாள சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். சுனில் கரியட்டுகரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக கிருஷ்ணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'பிக்காசோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஷேக் அஃப்சல் தயாரிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.