![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/04/20/z15.jpg?itok=J0QcO3DT)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பொலிவுட் நடிகர் பிரதிக் பாபர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்.
தர்பார் படத்தில் நடிக்கும் வில்லன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தி நடிகர் பிரதிக் பாபரை வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2015-ல் வெளியான ‘பாகி’ 2படத்தில் வில்லனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன.
அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து, தர்பார் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தர்பார் படத்தில் பிரதிக் பாபர் மும்பையை ஆட்டி வைக்கும் தாதாவின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடக்கிறது.
மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொங்கல் பண்டிகையன்று படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.