![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/02/q11.jpg?itok=8XzIzMtG)
அஜித் 2019ம் வருடத்தின் வெற்றி நாயகன். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே செம ஹிட் படங்கள்.
இப்படங்களின் சாதனையை விஜய்யின் பிகில் முறியடிக்கிறதா என்ற போட்டிகள் தான் போய்க் கொண்டிருக்கிறது.
வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார், அப்படத்திற்கான பூஜை போடப்பட்டு அன்றே படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு குழு அறிவித்துவிட்டனர்.
இப்படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இந்த நேரத்தில் அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.