![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/14/q21.jpg?itok=Tvkr7hiT)
இந்தியில் பேசச்சொன்ன செய்தியாளருக்கு பதிலடி கொடுத்த சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகும் தனக்கும், கதைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வரும் சமந்தா, அவ்வப்போது தான் நடித்த படங்களுக்கான புரொமோஷன் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை சமந்தா பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
“நான் தென்னிந்திய நடிகை” - இந்தியில் பேசச்சொன்ன செய்தியாளருக்கு பதிலடி கொடுத்தார் சமந்தா.
அப்போது தெலங்கானா என்கவுன்டர் குறித்து பதிலளித்த அவர், அதில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை இந்தியில் பதிலளிக்கும்படி கூறிய செய்தியாளரிடம், தனக்கு இந்தி நன்றாகவே தெரியும்.
“தென்னிந்தியாவில் பிறந்தவள் என்பதால் இந்தியில் உச்சரிப்பது சரளமாக இருக்காது” எனக் கூறிவிட்டு ஆங்கிலத்திலேயே பதிலளித்தார். இதேபோல், அண்மையில் கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்ஸியிடமும் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியில் பேசும்படி கேட்டதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்தது மிகவும் பிரபலமானது.