24 ஆண்டுகளின் பின் ரஜினியுடன் ஜோடி சேரும் கண்ணழகி | தினகரன் வாரமஞ்சரி

24 ஆண்டுகளின் பின் ரஜினியுடன் ஜோடி சேரும் கண்ணழகி

‘ரஜினி 168’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கண்ணழகி நடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘தர்பார்’ படத்தில் தன்னுடைய பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்திலான தன்னுடைய 168வது படத்துக்காக ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 

தலைவர் 168என அழைக்கப்பட்டுவரும் இந்தப் படத்தில் காமெடி நடிகர் சூரியை தவிர வேறு எவரெல்லாம் ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் எதுவும் அறிவிக்காமல் உள்ளது. 

இந்நிலையில் ரஜினி 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதல் முறையாக கீர்த்தி சுரேஷும், ரஜினியுடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு பிரகாஷ் ராஜும் நடிக்க இருக்கிறார்கள் என சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Comments