சிவகார்த்திகேயனின் பேச்சுகளை வைத்து உருவான பாடல் | தினகரன் வாரமஞ்சரி

சிவகார்த்திகேயனின் பேச்சுகளை வைத்து உருவான பாடல்

'ஹீரோ' படத்தில் இடம்பெற்ற 'சக மனிதன்' பாடல், சிவகார்த்திகேயன் பேச்சுகளை வைத்து உருவாக்கியுள்ளது படக்குழு. 

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஹீரோ'.​ேஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளி ப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு இருந்தாலும், வசூல் ரீதியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இதனிடையே 'சக மனிதனை மதிக்கும்' என்ற பாடல் உருவானதில் ஒரு சுவாரசியம் அடங்கியுள்ளது. 

என்னவென்றால், இந்தப் பாடல் படத்தில் எந்த இடத்தில் வருகிறது என்பதெல்லாம் பாடலாசிரியர் பா.விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள். பின்பு, இந்தப் பாடலை எழுதும் முன்பு தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா, பேட்டிகள், பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றில் சிவகார்த்திகேயன் பேசியதைப் பார்த்துவிட்டு எழுதச் சொல்லியிருக்கிறார்கள். 

அதில் அவர் பேசியதை அனைத்தையும் பார்த்துவிட்டே, அந்தப் பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார் பா.விஜய். 'மேடை ஏறினால் உண்மை மட்டுமே பேசுபவன்', 'புகழ் வந்த பின்பும் தரை மீது தான் நிற்கிறவன்', 'அன்பின் முன்னே தோற்று நிற்பவன்' போன்ற வரிகளை எல்லாம் எழுதியிருக்கிறார் பா.விஜய். 

பலரும் இந்தப் பாடல் சிவகார்த்திகேயனின் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துப் போவது போல் வரிகள் இருக்கிறது என்று கருத்துச் சொல்லி வருவதற்கு இது தான் காரணம். 'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

Comments