![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/29/collakshmi-stores-serial-photo-98974161122134_7892247_28122019_VKK_CMY.jpg?itok=Mt0TWV3-)
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார். இந்த நிலையில், குஷ்பு எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாக இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் ஒரு நெகட்டிவ் ரோலில் அதாவது வில்லியாக நடிப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. அதாவது படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் நடித்தது போன்று ஒரு அதிரடி வில்லி வேடம் என்றும் சொல்லப்படுகிறது.