பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் துனியாவுக்கு பெலிஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்.
கன்னட நடிகர் துனியா விஜய் தனது பிறந்தநாளை பெங்களூரு ஹோசர ஹள்ளியில் உள்ள வீட்டில் கொண்டாடினார். ரசிகர்கள் உறவினர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது அவர் உற்சாக மிகுதியில் பெரியவாள் கொண்டு பிறந்த நாள் கேக்கை வெட்டினார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த பெங்களூரு கிரி நகர் பெலிஸார் கேக்கை வாளால் வெட்டி அச்சுறுத்தியதாக துனியா விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். பெலிஸாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவித்துள்ளனர் .
துனியா விஜய்க்கு நாகரத்னா கீர்த்தி என்ற இரண்டு மனைவிகள் உள்ளார்கள். சமீபத்தில் இரண்டு மனைவிகளும் நடுரோட்டில் அடித்துக்கொண்டு மல்லுக் கட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மைக்காலமாக பிறந்தநாளை வாளால் வெட்டி பலரும் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த வருடம் சென்னை அருகே ரவுடி பினு கேக்கை அரிவாளால் வெட்டி பொலிஸில் சிக்கினார். இதேபோல் மாணவர்கள் சிலரும் கேக்கை அரிவாளால் வெட்டியதால் பெலிஸார் கைது செய்தனர்.