அருண்விஜயை புகழும் இயக்குநர் | தினகரன் வாரமஞ்சரி

அருண்விஜயை புகழும் இயக்குநர்

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராகி அனைவரின்  கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர், இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத்  தொடர்ந்து, அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா ஆகியோரை வைத்து  ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ரிலீஸாகாத நிலையில்  இவருடைய மூன்றாவது படமான ‘மாஃபியா’ ரிலீஸுக்கு ரெடியாகியுள்ள சமயத்தில்  கார்த்திக் நரேனிடம் பேசினோம். 

“எனக்கு ஹோம் டவுன் ஊட்டி. படிச்சது கோயமுத்தூர். அப்பா,  அம்மா இருவரும் டீச்சிங் புரஃபஷன்ல இருக்கிறவர்கள். இன்ஜினியரிங்  படிக்கும்போதே ஷார்ட் ஃபிலிம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன். ஹாலிவுட்டில்  இயக்குநர்கள் டேவிட் பின்சர், கிறிஸ்டோபர் நோலனும் இந்திய சினிமாவில்  மணிரத்னம், கெளதம் மேனனும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். 

சினிமாவுக்கு வரும்போது எனக்கு இருபது வயது. அப்போது சின்னப்  பையன் போன்ற தோற்றம் இருந்ததால் எனக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காததால்  சிரமங்களை சந்தித்தேன். என்னுடைய தவிப்பைப் பார்த்துவிட்டு அப்பாவே எனக்காக  படம் தயாரிக்க முன்வந்தார். அதே மாதிரி நான் சென்னையில் சினிமா கனவுகளோடு  இறங்க காரணமாக இருந்தவர் தீரஜ் வைத்தியா அண்ணன். இவர்களால்தான் இயக்குநராக  மாறினேன்.” என்வெர், 

தற்போது இயக்கி வரும் ‘மாஃபியா’ படம் பற்றி பேச ஆரம்பித்தார். 

“இது பொலிஸ் கதை. பொலீஸ் கதையில் இதுவரை சொல்லாத விஷயத்தைச்  சொல்லியுள்ளோம். ஆனால் சீரியஸாகச் சொல்லவில்லை. மக்கள் எதைத் தெரிந்துகொள்ள  வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி உள்ளோம். அந்தவகையில் முழுமையான  பொழுதுபோக்குப் படமாக இருக்கும். 

சென்னை பின்னணியில் கதை நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள்  இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதைதான் இந்தப் படம்.  நான் - லீனியர் முறையில நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. தியேட்டருக்கு  வருபவர்களுக்கு இதன் அனுபவம் புதுசா இருக்கும். ரசிகர்களுக்கான  என்கேஜ்மென்ட் படம் முழுவதும் இருக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளேன். 

தமிழ் சினிமாவில் எந்த வேடம் கொடுத்தாலும் பின்னியெடுக்கும்  நடிகர்கள் சிலர் மட்டுமே. அதில் அருண் விஜய் சாரும் ஒருவர். அவரால் எல்லா  விதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நினைக்கிறேன். அவருக்கு அந்தளவுக்கு  திறமை இருக்கிறது. ‘தடம்’ படத்தில் ​ெபாசிட்டிவ் ரோல் பண்ணியிருந்தார்.  இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமில்லையென்றாலும்  ஆக்ஷன் சீக்வன்ஸ் அதிகம்.

அந்தவகையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு  நம்பகத்தன்மையான ஹீரோ தேவைப்பட்டார். அதற்கு அருண்விஜய் சார் பொருத்தமாக  இருந்தார். கதை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை எத்தகையது என்று  தெரிந்துவிட்டதால் கெட்டப், உடல்மொழி என்று அனைத்துக்கும் தயாராகி வந்தார்.  இந்தப் படத்துக்காக கணிசமாக உடல் எடையைக் குறைத்தார். படத்தில்  போதைப்பொருள் தடுப்பு அதிகாரியா வருகிறார்.” என்றார்.   

Comments