புதிய ஃபிளாஷ் சார்ஜ் வரிசையை அறிமுகப்படுத்துகிறது OPPO | தினகரன் வாரமஞ்சரி

புதிய ஃபிளாஷ் சார்ஜ் வரிசையை அறிமுகப்படுத்துகிறது OPPO

125W ஃபிளாஷ் சார்ஜ், 65W AirVOOC வயர்லெஸ் பிளாஷ் சார்ஜ், மிகச் சிறிய கைக்கடக்கமான 50W மினி சூப்பர் வூக் சார்ஜர் (mini Super VOOC) மற்றும் 110W மினி ஃபிளாஷ் சார்ஜர் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வெளியீட்டை OPPO அறிவித்துள்ளது.

125W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் மொபைல் போன் துறையில் சமீபத்திய ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்ப முன்னேற்றத்தை காட்டுகிறது. மேம்பட்ட குறியாக்க வழிமுறை (encryption algorithm) மற்றும் கடுமையான வெப்பநிலை கட்டுப்பாட்டு ஒழுங்குபடுத்தல்களுடன், இது ஃபிளாஷ் சார்ஜிங் சாதனத்தின் பாதுகாப்பான மற்றும் திறனான பயன்பாட்டை செயல்படுத்துகிறது. 65W AirVOOC வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் ஆனது, பயனர்கள் கம்பியுடனான அல்லது வயருடனான சார்ஜிங்குடன் ஒப்பிடும்போது மிக வேகமாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 50W மினி சூப்பர்வூக் சார்ஜர் மற்றும் 110W ஃபிளாஷ் சார்ஜர் ஆகியன, OPPO இன் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தின் தனித்துவமான கண்டுபிடிப்புகளாகும். மதிப்பிட முடியாத மிக பாரமற்ற, மெல்லிய மற்றும் கையடக்க அம்சங்களின் விளைவாக உயர் சக்தி கொண்ட சார்ஜர்களின் சிறிய வடிவங்களின் தலைவன் என்று கூறலாம்.

OPPO இன் பிரதான சார்ஜிங் தொழில்நுட்ப விஞ்ஞானி ஜெஃப் ஷாங் (Jeff Zhang) கருத்துத் தெரிவிக்கையில்: “உலகளவில் 5G மாற்றத்தை விரைவுபடுத்தியதுடன், கேமிங் மற்றும் வீடியோ பார்வையிடல் உள்ளிட்ட உயர்-சக்தி-நுகர்வு அப்ளிகேஷன்களின் அதிகரித்துவரும் பல்வகைப்படுத்தல் ஆனது, மொபைல் போன்களின் மின்கலங்களின் ஆயுள் மற்றும் பயனரின் சார்ஜிங் அனுபவம் தொடர்பில் புதிய சவால்களாக காணப்படுகிறது. VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே, OPPO வேகமாக சார்ஜ் செய்வதில் முன்னணியில் திகழ்கிறது. தற்போது, பயனர்களுக்கு பாதுகாப்பான, திறனான மற்றும் வசதியான அதிவேக சார்ஜிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, உயர் சக்தி, வயர்லெஸ் மற்றும் அதி-சிறிய சார்ஜிங் தொழில்நுட்பத் துறையில் எங்கள் நிபுணத்துவம் மற்றும் நன்மைகளைத் தொடர்ந்து வழங்குவதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

 

 

Comments