காதல் தோல்விகளுக்குப் பின்னும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா! | தினகரன் வாரமஞ்சரி

காதல் தோல்விகளுக்குப் பின்னும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலோ அல்லது நடிக்காமல் சில காலம் பிரேக் எடுத்துக்கொண்டாலோ அவர்களால் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முடியாது. 

ஆனால் இந்த வழக்கத்தை முறியடித்து தற்போது தமிழ் திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. 

இந்த நிலையில் நயன்தாராவின் வெற்றிக்கான ரகசியத்தைப் பற்றி பேட்டி ஒன்றில் பிரபல வில்லன் நடிகரான பயில்வான் ரங்கநாதன் உடைத்துப் பேசியுள்ளார். 

அதாவது நயன்தாரா பிரபுதேவாவுடன் டேட்டிங் செய்துகொண்டிருந்தபோது இனி நயன்தாரா நடிக்கவே மாட்டார் என்ற தகவல் பரவியது. 
ஆனால் அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்து தற்போது நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழைப் பெற்றிருக்கிறார். 

இதுபற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில், ‘காதல் தோல்வி சிலருக்கு மைனஸ் ஆகும். சிலருக்கு பிளஸ் ஆகும். 

ஒன்றுக்கு மேலான காதல் தோல்வினா ப்ளஸ் ஆகிவிடும் போல.. காதல் தோல்வி, நிச்சயதார்த்தம் முறிவு போன்ற பலவற்றை நயன்தாரா தொடர்ந்து சந்தித்ததால் மக்களின் அனுதாபத்தை பெற்று மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்’ என்று கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல், நயன்தாரா தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்காகவே ‘அறம்’ என்ற படத்தில் நடித்து, கெட்டிக்கார தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ரங்கநாதன். இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

Comments