சிறுவர் சிறுமியருக்கான மாத இதழ் 'குட்டிசுட்டி' | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர் சிறுமியருக்கான மாத இதழ் 'குட்டிசுட்டி'

லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படும் 'அதுருமிதுரு'வின் தமிழ் பதிப்பான 'குட்டிசுட்டி' நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இதழ்கள் வெளிவந்துள்ளன. முன்பள்ளி பாடசாலை சிறுவர் சிறுமியருக்கென வடிவமைக்கப்பட்டுள்ள 'குட்டிசுட்டி'   சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் மாத இதழாக வெளிவருகிறது.  

சிறுவர் சிறுமியரின் வர்ண சித்திரங்கள், பிறந்தநாள் வாழ்த்துகள், குட்டிச் சிறுகதைகள், பாலர் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்களைத் தாங்கி வருகிறது. மிகவும் எளிமையான மொழிநடையில் சிறுவர்கள் இலகுவாக படிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள 'குட்டிசுட்டி' 28 பக்கங்களைக் கொண்டுள்ளது. குட்டிசுட்டி இதழுடன் பெரிய படத்தாள் ஒன்று இலவசமாக இணைக்கப்பட்டுள்ளது.

'குட்டிசுட்டி'யை நாடெங்கிலுமுள்ள பத்திரிகை விற்பனையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  

Comments