![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/13/a25.jpg?itok=IDCNIThK)
டாக்டர் படத்தில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘செல்லம்மா’ என்கிற பாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டது. அனிருத், ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இந்தப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
யூடியூபிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.