![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/01/24/a29.jpg?itok=NPRW0ZLK)
டயர்கள் மற்றும் ரேடியல்களுக்கான இலங்கையின் மிகப்பெரிய உற்பத்தி வசதியான Ferentino Tyre Corporation (Pvt) Limited ஜனவரி 14ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
250 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த வசதியானது, Ceylon Steele Corporation (Pvt) Ltd நிறுவனத்தின் தற்போதைய தலைவர் புகழ்பெற்ற தொழில்முனைவோர் நந்தன லொகுவிதானவின் சிந்தனையில் உருவானதாகும். மைல்கல்லாக அமைந்திருக்கும் இத்திட்டம் இதுபோன்ற வசதிகளுடன் இலங்கையில் அமையும் முதலாவது திட்டம் என்பதுடன், விசேடமாக SUVகள், இரு சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், ட்ரக்ஸ், பஸ்கள் போன்ற பயணிகள் கார் ரேடியல்களை (PCR) உற்பத்திசெய்யும் தென்கிழக்கு ஆசியாவிலேயே உள்ள பாரிய வசதியாகவும் காணப்படுகிறது.
இது உள்ளூர் திறமைகளை அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இணைப்பதாகவும் அமைகிறது.
நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு பாரிய ஊக்கமளிக்கும் புதிய உற்பத்தி ஆலை, டயர் உற்பத்தியில் அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தை ஒரு உகந்த, உலகத் தரம் வாய்ந்த உற்பத்திக்கான உள்ளூர் கைவினைத்திறனுடன் ஒருங்கிணைக்கிறது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு இத்திட்டத்துக்கான வசதிகளை இலங்கை முதலீட்டுச் சபை ஏற்படுத்திக் கொடுத்திக் கொடுத்துள்ளது.
Ferentino Tyres உள்நாட்டில் கிடைக்கும் ரப்பரை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துவதுடன், இதன்மூலம் உலகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உள்ளூர் தொழில்துறையை உயர்ந்த மட்டத்துக்கு தள்ள முடியும். இத்திட்டத்தின் முதல் கட்டம் ஏற்கனவே நிறைவடைந்து செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இரண்டாம் கட்டம் 2022 மார்ச் மாதம் புூர்த்திசெய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய Ferentino Tyre Corporation (Pvt) Limited நிறுவனத்தின் தலைவர் லொகுவிதான குறிப்பிடுகையில் “வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வருமானம் போன்ற தொற்றுநோய்க்குப் பின்னரான சவால்களிலிருந்து உள்ளூர் பொருளாதாரம் மீள்வதற்கு மெதுவான உந்துதல் ஒன்று தேவைப்படும் தற்போதைய சூழ்நிலையில் இத்திட்டத்தை ஆரம்பிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.