![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/02/07/b2.jpg?itok=i8wK52Cs)
திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி மற்றும் ஷாலினி இப்பொழுது ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். ஷாலினி திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்காமல் இருக்க சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு ஷாலினியும் ஷாமிலியின் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளில் கலக்கிய குழந்தை நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஷாலினி மற்றும் ஷாமிலி. அக்கா தங்கை என இவர்கள் இருவரும் இணைந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்க அதில் அஞ்சலி, துர்கா என பல திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றவர்.
கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இந்த காதலுக்கு இயக்குனர் சரண் தூது சென்றார் எனவும் சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட, திரைப்படங்களில் காண முடியாத ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அவ்வபோது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட ஷாலினி மற்றும் ஷாமிலியின் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
குறிப்பாக அந்த திருமணத்தில் அஜித்தின் மகன் ஆத்விக் அம்மா ஷாலினியுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படம் செம வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து இப்பொழுது ஷாலினி மற்றும் ஷாமிலி என இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகிறது.